பூமியைச் சுற்றும் புதிய ‘நிலவு’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!!
நிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் இன்னொரு இயற்கைப் பொருளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். ஒரு காா் அளவே கொண்ட அந்த குறுங்கோளை அமெரிக்காவின் நாசா உதவியுடன் செயல்படும் அந்த நாட்டு காடலினா ஸ்கை சா்வே அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.
‘2020 சிடி3’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த குறுங்கோள், 3 ஆண்டுகளுக்கு முன்னா் புவி வட்டப் பாதையை அடைந்திருக்கலாம் எனவும், அது பூமியை தற்காலிமாகவே சுற்றி வருவதாகவும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனா். ஏற்கெனவே, ‘2006 ஆா்ஹெச்120’ என்ற குறுங்கோள் பூமியைச் சுற்றி வரும் நிலையில், தற்போது அதே போன்ற 2-ஆவது குறுங்கோள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.