வரலாற்றில் இன்று (15.12.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

திசம்பர் 15 (December 15) கிரிகோரியன் ஆண்டின் 349 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 350 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 16 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

687 – முதலாம் செர்கியசு திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
1025 – எட்டாம் கான்சுடண்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
1256 – மங்கோலியப் படைகள் உலாகு கான் தலைமையில் அலாமுட் (இன்றைய ஈரானில்) கோட்டையைக் கைப்பற்றி அழித்தன.
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கடற்படைகள் செயிண்ட் லூசியா சமரில் மோதின.
1799 – முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட இலங்கையின் முதலாவது ஆங்கில மதப்பள்ளி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.[1]
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை டென்னசியில் முற்றாகத் தோற்கடித்தனர்.
1891 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
1905 – அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.
1914 – முதலாம் உலகப் போர்: சேர்பிய இராணுவம் பெல்கிரேடை மீண்டும் கைப்பற்றியது.
1914 – சப்பானில் மிட்சுபிசி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்லப்பட்டனர்.
1917 – முதலாம் உலகப் போர்: உருசியாவுக்கும் மைய நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.
1941 – பெரும் இன அழிப்பு: உக்ரேனின் கார்கீவ் நகரில் 15,000 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.
1960 – மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
1961 – நாட்சி செருமனியின் இராணுவத்தலைவர் அடோல்வ் ஏச்மென் யூத மக்களுக்கு எதிராகப் புரிந்த குற்றங்களுக்காக மரண தண்டனை பெற்றார்.
1967 – ஒகையோவில் ஒகையோ ஆற்றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர்.
1970 – சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் இறங்கியது. இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
1970 – தென் கொரியப் பயணிகள் கப்பல் கொரிய நீரிணையில் மூழ்கியதில் 308 பேர் உயிரிழந்தனர்.
1978 – மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க அரசுத்தலைவர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
1981 – லெபனான், பெய்ரூத் நகரில் ஈராக்க்கியத் தூதரகம் வாகனத் தற்கொலைக் குண்டுக்கு இலக்காகியதில் ஈராக்கியத் தூதர் உட்பட 61 பேர் கொல்லப்பட்டனர். இதுவே நவீன முறையில் அமைந்த முதலாவது தற்கொலைத் தாக்குதல் எனக் கருதப்படுகிறது.
1994 – இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.
1995 – ஈழப் போர்: ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் “அப்துல் ரவூஃப்” என்பவர் தீக்குளித்து இறந்தார்.
1997 – தஜிகிஸ்தான் விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா விமானநிலையத்திற்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் உயிரிழந்தனர்.
1997 – தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.
2001 – பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
2006 – இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.
2010 – 90 ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்துமசு தீவுக்கருகில் பாறைகளுடன் மோதியதில் 48 பேர் உயிரிழந்தனர்.
2013 – தெற்கு சூடான் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
2014 – சிட்னியின் மையப் பகுதியில் உணவகம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவன் 18 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தான். 16 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இரண்டு பணயக் கைதிகளும், துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டனர்.
2017 – சாவகத் தீவில், தசிக்மலாயா நகரை 6.5 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர், 36 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

37 – நீரோ, உரோமைப் பேரரசர் (இ. 68)
1832 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (இ. 1923)
1834 – சார்லசு அகத்தசு யங், அமெரிக்கச் சூரியக் கதிர்நிரலியல் வானியலாளர் (இ. 1908)
1852 – என்றி பெக்கெரல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1908)
1860 – நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு மருத்துவர் (இ. 1904)
1865 – ஜான் வுட்ரோஃப், பிரித்தானிய கீழ்த்திசை மொழிப்புலமையாளர் (இ. 1936)
1869 – திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 1938)
1889 – நீலகண்ட ஸ்ரீராம், அடையாறு பிரம்மஞான சபையின் தலைவர் (இ. 1973)
1894 – வைபர்த் தவுகிளாசு, கனடிய வானியலாளர் (இ. 1988)
1907 – ஒசுக்கார் நிமேயெர், ஐநா தலைமையகத்தை வடிவமைத்தவ பிரேசில் கட்டிடக் கலைஞர் (இ. 2012)
1908 – இரங்கநாதானந்தர், இந்திய மதகுரு (இ. 2005)
1913 – கா. ஸ்ரீ. ஸ்ரீ, தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
1932 – டி. என். சேஷன், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (இ. 2019)
1933 – பாப்பு, ஆந்திர இயக்குநர் (இ. 2014)
1936 – சோ. ந. கந்தசாமி, தமிழகத் தமிழறிஞர்
1942 – மகிபை பாவிசைக்கோ, தமிழக எழுத்தாளர், பத்திரிக்கையாளர் (இ. 2016)
1944 – சிகோ மெண்டிஸ், பிரேசில் தொழிற்சங்கத் தலைவர் (இ. 1988)
1945 – வினு சக்ரவர்த்தி, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2017)
1953 – ஈ. சரவணபவன், இலங்கை அரசியல்வாதி, ஊடகவியலாளர்
1978 – மாற்கு யான்சேன், டச்சு இசைக்கலைஞர்
1982 – சார்லி சாக்ஸ், ஆங்கிலேய நடிகர்

இறப்புகள்

1675 – யொகான்னசு வெர்மிர், டச்சு ஓவியர் (பி. 1632)
1857 – ஜார்ஜ் கேலி, ஆங்கிலப் பொறியாளர் (பி. 1773)
1890 – வீற்றிருக்கும் எருது, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1831)
1950 – வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல்வாதி (பி. 1875)
1952 – பொட்டி சிறீராமுலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1901)
1965 – மு. பாலசுந்தரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1903)
1966 – வால்ட் டிஸ்னி, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1901)
1987 – ப. ராமமூர்த்தி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1908)
2011 – எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை, இலங்கை மெல்லிசை, திரைப்படப் பின்னணிப் பாடகர்
2011 – கிறித்தோபர் இட்சன்சு, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1949)

சிறப்பு நாள்

பன்னாட்டுத் தேயிலை நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!