வால்ட் டிஸ்னி காலமான தினமின்று!
நடப்பதே நடந்ததையே நினைத்து வருத்தப்படுபவர்கள் அதிகம் அவர்கள் வாழ்கையில் முன்னேற வாய்ப்பில்லாமல் போகிறது . அடுத்து நடப்பதை யோசிப்பவர்கள் வாழ்கையில் முன்னேறுகிறார்கள் அதற்கு சிறந்த உதாரணம் பல பேர் அவர்களில் வால்ட் டிஸ்னியும் ஒருத்தர். வால்ட் டிஸ்னி ஓர் ஓவியர்.”ஆஸ்வால்ட் “என்ற பெயரில் முயல் கதாபத்திரம் ஒன்றை உருவாக்கி அனிமேஷன் படங்களை தயாரித்து புகழ் பெற்றார் நல்ல சம்பாதித்தார்.ஆனால் மற்றவர்கள் தந்திரமாக சூழ்ச்சி செய்து அவருடைய ஆஸ்வால்ட் கதாபத்திரத்தை அவரிடம் இருந்து பறித்து விட்டனர்.அதுமட்டும் இல்லாமல் அவரிடம் பணிபுரிந்த ஓவியர்கள் அனிமேஷன் நிபுணர்கள் இப்போது அவர்கள் பக்கம். இதனால் மனம் நொந்து வெகுநேரம் புலம்பிய வால்ட் டிஸ்னி கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார் . “நடந்ததையே நினைத்து வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை.அடுத்து நடப்பதை யோசிப்பதே புத்திசாலித்தனம் … அவர்கள் என் படைப்பை பறித்து விடலாம் ஆனால் என் கற்பனைகளை எதுவும் செய்ய முடியாது ஆஸ்வால்ட்-க்கு பதிலாக அதை போலவே வேறொரு இன்னொரு வெற்றிகரமான கதாபத்திரத்தை உருவாக்குவேன்”என்று உறுதியாக நினைத்தார். அதை ஒட்டி புதிய அனிமேஷன் கதாபாத்திரங்களை நினைத்து கடைசியாக அவரின் செல்ல பிராணி ஒரு எலி “மார்டிமெர் ” அதை மனதில் நினைத்து அதை வரைந்து அதற்கு மனிதரை போல் பான்ட்,சட்டை எல்லாம் போட்டு அசத்தலாக வரைந்தார். அதை தன் மனைவியிடம்(லில்லியன்) காண்பித்ததும் அவர் வாவ் என்று துள்ளி குதித்தார். கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்று கேட்டார் லில்லியன் “மார்டிமெர்” என்று சொன்னார் வால்ட் டிஸ்னி. அதற்கு லில்லியன் “பெயர் நீளமா உள்ளது வேற பேர் வைப்போம்”னு சொன்னார்.”சரி ஒரு நல்ல பேர நீயே சொல்லு”னு சொன்னார் டிஸ்னி அதற்கு அவர் மக்கள் மனசுல எப்பொதும் நிக்கணும் அதனால் “மிக்கி ” னு ஒரு பேர சொன்னங்க அந்த மிக்கிதான் இப்ப உலகத்தையே கலக்கிய “மிக்கி மௌஸ்” கதாபத்திரம். சந்தர்ப்ப சூழ்நிலையோ பெரிய பிரச்சனையோ வரும்போதுதான் நமக்குள்ள இருக்குற அலாதியான பல திறமைகள வெளிபடுத்துது. நடந்ததையே நினைத்து வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை என்பதை மட்டுமின்றி சரித்திரம் ஒரு முறை உன் பேரைச் சொல்ல வேண்டும் என்றால் நீ பல முறை என்னிடம் வர வேண்டும் இப்படிக்கு -முயற்சி உணர்த்திய டிஸ்னி-க்கு மின்கைத்தடி சார்பில் அஞ்சலி.
சர்தார் வல்லபாய் பட்டேல் இறந்த தினம்
இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவர் சர்தார் வல்லபாய் பட்டேல், குறுநில மன்னர்களும், ஜமீந்தார்களும் ஆட்சி செலுத்தி வந்த துண்டு துண்டாக இருந்த பகுதிகளை இணைத்து இந்திய தேசத்தை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் இந்திய காவல்துறையை ஒருங்கிணைத்தார். இந்திய காவல் பணியில் சேரும் போலிஸ் அதிகாரிகள் பயிற்சி பெறும் ஐதராபாத்தில் அமைந்துள்ள உயர் பயிற்சி மையம் சர்தார் வல்லபபாய் பட்டேல் பெயரை தாங்கியுள்ளது. எளிமையான வாழ்க்கை, பாரபட்சமற்ற அப்பழுக்கற்ற தூய்மையான பொதுப்பணி என்று நேர்மையான கோட்பாடுகளை பின்பற்றிய உயர்ந்த மனிதர் சர்தார் வல்லபபாய் பட்டேல். வலிமையான மத்திய அரசு உருவாக்கத்திற்கு அடிகோலினார்.
மொழிவழி மாநிலம் உருவாக்கிய பொட்டி ஸ்ரீராமுலு இறந்த தினம்
என் மொழிக்காரன் தான் என் மாநிலத்தை ஆள வேண்டும், என் மாநிலத்தில் உருவாகும் ஆற்று நீரை உனக்கேன் தர வேண்டும் என இன்று மொழியை வைத்தும், இனத்தை வைத்தும் சண்டைகள் வருகிறது. அந்த சண்டைகளுக்கு மூலக்காரணம் மொழிவழியாக மாநிலங்களை பிரித்தது தான். மொழிவழியாக மாநிலத்தை பிரிப்பதை ஆரம்பத்தில் பலரும் எதிர்த்தனர். ஆனால் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட பொட்டி ஸ்ரீராமுலு என்கிற சுதந்திர போராட்ட வீரர், மொழிவழி மாநிலம் வேண்டும்மென உண்ணாவிரதம்மிருந்து உயிர்விட்டதால் நாட்டில் ஏற்பட்ட கலவரத்தால் மொழிவழி மாநிலம் உருவாக்க உத்தரவிட்டார் பிரதமராக இருந்த நேரு.
ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்திய நாள்
1891 டிசம்பர் 15 டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் (Dr. James Naismith) (நவம்பர் 6, 1861 – நவம்பர் 28, 1939) ஒரு கனடிய விளையாட்டு கல்வி ஆசிரியரும், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளரும், அமெரிக்க காற்பந்தாட்டத்தில் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். 1891ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்; இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன. 1861ல் அல்மொன்டே, கனடாவில் பிரந்த நெய்ஸ்மித் ஸ்பிரிங்ஃபீல்ட், மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டைக் கண்டுபிடித்தார். 13 ஆண்டுகளுக்குப்பின்னர் 1904 ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு 1936 ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு இருந்தது. 1898ல் நெய்ஸ்மித் கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரும் முதலாம் கூடைப்பந்து பயிற்றுனராவும் ஆனார்.
அமெரிக்க அரசியல் சட்டத்தின், மதுவிலக்கை ரத்து செய்யும் 21ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த நாள்
அமெரிக்க அரசியல் சட்டத்தின், மதுவிலக்கை ரத்து செய்யும் 21ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த நாள் டிசம்பர் 15. சட்டங்களை நிறைவேற்ற அமெரிக்க அரசியல் சட்டம் வகுத்துள்ள இரு வழிகளில் ஒன்றான, மாநில அவைகளின் சிறப்புக்கூட்டங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட ஒரே திருத்தம் இதுதான். அதைப்போலவே, அமெரிக்க அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 27 திருத்தங்களில், முந்தைய திருத்தம் ஒன்றை ரத்து செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரே திருத்தமும் இதுதான். ஆம்! மது ஒழிப்பைக் கொண்டுவந்த 18ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை ரத்து செய்வதற்காக இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவை உருவாக்கிய தந்தைகளில் ஒருவரும் மருத்துவருமான பெஞ்சமின் ரஷ், அதிக அளவிலான மது, மனிதர்களின் உடல், மன நலங்களைப் பாதிக்கிறது என்று மருத்துவரீதியாக நிரூபித்தார். 1826இல் உருவான மது ஒழிப்பு அமைப்பின் தொடர்ச்சியான இயக்கங்களால் 1919இல் மதுவை உற்பத்தி செய்தல், கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல் ஆகியவற்றைத் தடை செய்யும் 18ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம், மதுவை அருந்துவதையோ, தனிப்பட்ட முறையில் வைத்திருப்பதையோ தடை செய்யவில்லை! இதை நடைமுறைப்படுத்துவதற்காகவே வோல்ஸ்டெட் சட்டம் என்பதும் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை நிறைவேற்றுவதை, அப்போதைய அதிபர் உட்ரோ வில்சன் தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுக்க, இரு அவைகளும் அவரது வீட்டோவை பெரும்பான்மையுடன் ரத்து செய்து, சட்டத்தை நிறைவேற்றின. அவ்வளவு தீவிரமாக நிறைவேற்றப்பட்ட இச்சட்டம்தான், 14 ஆண்டுகளில் மீண்டும் ரத்து செய்யப்பட்டது. மது ஒழிப்புக்காலத்தில் குற்றங்களின் எண்ணிக்கை மிக அதிமாக உயர்ந்தது. கள்ளச்சந்தையில் மதுவை விற்பவர்களுக்குக் கிடைத்த ஏராளமான வருவாயால், சிக்காகோவின் மிகப்பெரிய தாதாவான அல் கேபோன் உள்ளிட்ட மிகப்பெரும் தாதாக்களும், குழுக்களும் உருவானதை, அமெரிக்க அரசால் கட்டுப்படுத்த இயலாமல் போனது. இதனால், 18ஆவது திருத்தத்தை ரத்து செய்யும் 21ஆவது சட்டத்திருத்தம் 1933 டிசம்பர் 5 அன்று நிறைவேற்றப்பட்டு, 15 அன்று நடைமுறைக்கு வந்தது.
தோழர் பி.ராமமூர்த்தி (20 செப். 1908 – 15 டிச. 1987) அவர்களின் நினைவு தினம்
தோழர் பி.ராமமூர்த்தி (20 செப். 1908 – 15 டிச. 1987) அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர், NLC உருவாக காரணமாக இருந்தவர், தலித்துகளை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குள் அழைத்து சென்ற தோழர் பி.ராமமூர்த்தி (20 செப். 1908 – 15 டிச. 1987) அவர்களின் நினைவு தினம் இன்று.
எருது_நினைவு_தினம்
மாறுதலான பெயர்களைக் கொண்ட அமெரிக்க-இந்திய கொள்கை வீரர் வீற்றிருக்கும்_எருது_நினைவு_தினம் வீற்றிருக்கும் எருது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் டக்கோட்டா மாகாணத்தில் பேராறு என்றழைக்கப்படும் பகுதியில் பிறந்தார். அவர் ஐக்கிய அமெரிக்க கொள்கைகளை எதிர்த்த “ஆவி நடனம்” (Ghost Dance) என்ற இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று பயந்து, அவரைக் கைதுசெய்யப் போனவிடத்தில், “அமெரிக்க-இந்திய காவல் துறை”யினர் அவரை “நிலைக்கல் இந்தியக் காப்பிடம்” என்னும் பகுதியில் சுட்டுக் கொன்றனர்.
நெல்சன் மண்டேலாவின் உடல் பத்து நாட்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்து.
டிசம்பர் 5 ஆம் தேதி மரணமுற்ற தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடல் பத்து நாட்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது அதன் பின்னர் டிசம்பர் 15 ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அந்நிகழ்வில் 90 உலக நாட்டு தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
எழுத்தாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. பிறந்த தினம் இன்று.
தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு மிக முக்கிய இடமுண்டு. த.நா. குமாரசாமி, த.நா. சேநாபதி, பின்னர் ரா.கி. ரங்கராஜன், சிவன், சுசீலா கனகதுர்கா, கௌரி கிருபாந்தன் எனப் பலர் இதன் வளர்ச்சிக்கு நல்ல பங்களிப்புகளைத் தந்துள்ளனர். இவர்களில் முக்கியமானவராகத் திகழ்ந்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. எனப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசன். ராத்தியிலிருந்து தமிழுக்கு மட்டுமல்லாது தமிழிலிருந்து சிறந்த ஆக்கங்களையும் பிற மொழிகளுக்கு மொழிபெயர்த்துள்ளார் கா.ஸ்ரீ. ஸ்ரீ. பாரதியாரின் ‘தராசு’ கட்டுரைகளை ஹிந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார். அகிலன், ஞானபீடப் பரிசு பெற்றபோது அவரைப் பற்றிய அறிமுகக் கட்டுரையை மராட்டிய இதழ்களில் எழுதியிருக்கிறார். ‘இந்தியச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் மாதவய்யா, புதுமைப்பித்தன், கல்கி, பி.எஸ்.ராமையா, கு.ப.ரா., சிதம்பர சுப்பிரமணியன் வரையிலான தேர்ந்தெடுத்த பன்னிரண்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை ஹிந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார். எழுத்தாளர் சூடாமணியின் சிறுகதை ஒன்றையும் மராத்தியில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘சுதர்ஸனம்’ மாத இதழில் ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். காண்டேகரின் 13 நாவல்களையும், 150 சிறுகதைகளையும் மொழிபெயர்த்துள்ளார் கா.ஸ்ரீ.ஸ்ரீ. பதினைந்து நாவல்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் போன்றவற்றை கா.ஸ்ரீ.ஸ்ரீ. தந்திருக்கிறார். கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் தமிழில் பெயர்த்த ‘யயாதி’க்கு 1991ல் சாகித்ய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு கிடைத்தது. இலக்கிய உலகில் தனக்கென ஒரு பாணி, தனி நடை ஏற்படுத்திக்கொண்டு வெற்றி பெற்ற கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் படைப்புகளை கலைமகள் பிரசுரம், அல்லயன்ஸ் பதிப்பகம், அலமு நிலையம் போன்றவை வெளியிட்டுள்ளன. குறிப்பாக அல்லயன்ஸ் பதிப்பகம் இன்றளவும் லாப நோக்கற்று அவரது நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கா.ஸ்ரீ.ஸ்ரீ., ஜூலை 28, 1999 அன்று நாசிக்கில், 86ஆம் வயதில் காலமானார்.
நீரோ குளோடியஸ் சீசர் ஆகுஸ்டஸ் ஜேர்மானிக்கஸ் பிறந்த நாள்
டிசம்பர் 15 (Nero Claudius Caesar Augustus Germanicus; டிசம்பர் 15, கிபி 37 – ஜூன் 9, கிபி 68), என்பவன் ஐந்தாவதும், ஜூலியோ-குளோடிய அரசவம்சத்தின் கடைசியுமான ரோமப் பேரரசன் ஆவான். நீரோ அவனது மாமனான குளோடியசினால் ரோமப் பேரரசின் மன்னனாக்கும் முகமாக வளர்க்கப்பட்டவன். குளோடியசின் மறைவுக்குப் பின்னர் நீரோ அக்டோபர் 13, 54 இல் மன்னனாக முடி சூடினான். நீரோ கிபி 54 முதல் 68 வரை ரோமப் பேரரசை ஆண்டான். இவன் தனது ஆட்சிக் காலத்தில் ரோமாபுரியின் வர்த்தகம், மற்றும் ரோமின் கலாச்சாரத் தலைநகரின் விரிவு ஆகியவற்றில் மிகவும் அக்கறை கொண்டிருந்தான். நாடக மாளிகைகள் பல கட்டுவித்தான். விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்தான். இவனது காலத்தில் பார்த்தியப் பேரரசுடன் நிகழ்ந்த வெற்றிகரமான போர், அதன் பின்னர் அப்பேரரசுடன் அமைதி உடன்பாடு (58–63) ஆகியவை முக்கியமானவை. கிபி 68 இல் ரோமப் பேரரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மறைவிடத்தில் வாழ்ந்து வந்தான். இறுதியில் ஜூன் 9, 68 இல் கட்டாயத் தற்கொலை செய்து கொண்டு இறந்தான். ஆனால் காலங்கள் எத்தனை கடந்தாலும் நீரோ மன்னர்கள் சாவதில்லை.
டி.என்.சேஷன் பிறந்த நாள்
டிசம்பர் 15 இந்தியத் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சுதந்திர இந்தியாவின் 10வது தலைமை தேர்தல் ஆணையராக செயல்பட்ட சேஷன் தனது கராறான அணுகுமுறையால் பிரபலமடைந்தார். சேஷன் தேர்தல் ஆணையராக ஆன பிறகே தேர்தல் ஆணையத்தின் வலிமையும், இருப்பும் பெரிதாக உணரப்பட்டது. தேர்தலில் வாக்களிக்க வாக்காளரின் புகைப்படம் கொண்ட அடையாள அட்டை முறையை 1993ல் கொண்டுவந்தவர் சேஷன். 1990 முதல் 1996 வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சேஷன் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், பிரசாரங்கள் நிறுத்தப்படவேண்டும், தேர்தல் அன்று, வாக்குச் சாவடிக்கு அருகில் பிரச்சாரம் நடத்தக்கூடாது போன்ற விதிகளை கடுமையாக அமல்படுத்தினார். தேர்தல் காலத்தில் நடைபெறும் வன்முறைகளை தனது கராறான நடவடிக்கைகள் மூலம் வெகுவாகக் குறைத்தவர் சேஷன். 1996ல் ரமோன் மகசேசே விருது பெற்றார். இப்பேர்பட்டவர் பிறந்த நாளில் தவறான நோக்கில் பயணிக்கும் தேர்தல் அதிகாரி ஆசியுடன் சென்னை பிரஸ் கிளப் தேர்தல் நாடகம் நடப்பது வேதனை
