எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
கனமழை காரணமாக தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (டிச.13) மற்றும் 16 ம் தேதியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையை கருமேகங்கள் சூழந்த நிலையில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்றும் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு
தூத்துக்குடி, விழுப்புரம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, தென்காசி
பள்ளிகளுக்கு மட்டும்
திருநெல்வேலி, புதுக்கோட்டை, மதுரை, மயிலாடுதுறை, விருதுநகர்
ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், தேனி, சேலம், திண்டுக்கல்