ஜெயலலிதா”வின்’ அரசியல் பயணம்
தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக முதல்வர் ஜெயலலிதா விளங்கினார். 1989 ஆம் ஆண்டு திமுக தலைமையில் ஆட்சி அமைந்த போது அதிமுகவுக்கு தலைமை வகித்த ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
மாநிலங்களவையில் 1984 முதல் 1989 வரையில், உறுப்பினராக இருந்து நாடாளுமன்ற அனுபவத்தைப் பெற்றிருந்த அவருக்கு, சட்டப் பேரவையில் உரையாற்றுவதில் எந்தவித தயக்கமும் ஏற்படவில்லை. அப்போது, 9-வது சட்டப் பேரவை 1989 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டது