தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்;- தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி தராது.