வைரலாகும் அண்ணன் தங்கை பாச வீடியோ
திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் தங்கையின் பிரிவை நினைத்து அண்ணன் அழுவதும், அண்ணனை தங்கை கட்டி பிடித்து கண்ணை துடைத்து சமாதானம் செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒவ்வொரு தங்கைக்கும் திருமணம் செய்து கொடுக்க பல்வேறு தியாகங்களை அண்ணன் செய்கிறான். அப்படியாக அண்ணன் தங்கையைத் திருமணம் செய்து வேறு வீட்டிற்கு அனுப்பும் தரும் மிகவும் நெகிழ்ச்சியானது.
அண்ணன் தங்கை பாசத்தை வைத்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட சினிமா காட்சிகள் வந்துவிட்டது. தாலிசெண்டிமெண்ட்டிற்கு அடுத்து அண்ணன் தங்கை பாசம் தான் தமிழ் சினிமாவில் ஆளுமை செய்கிறது தற்போது வெளியான நம்ப வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் படத்தில் கூட அண்ணன் தங்கை பாசம்தான் முதன்மையானது ஆனால் அந்த சினிமா காட்சிகளை எல்லாம் மிஞ்சும் வகையில் சமீபத்தில் தங்கையைத் திருமணம் செய்து மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும் அண்ணன் கதறிக் கதறி அழுவதும், தங்கை அண்ணனைக் கட்டிப்படித்து கண்களைத் துடைத்து ஆறுதல் சொல்லும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது