நடுங்கவைக்கும் ஆஸ்திரேலிய காட்டுத் தீ!
பூமியின் நுரையீரலாகக் கருதப்படும் அமேசானில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீயே இன்னும் முழுவதுமாக அடங்கவில்லை, அதற்குள் கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் பற்றி எரிகிறது காட்டுத்தீ. மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இதன் விளைவுகளால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அக்காடுகளையே வாழ்விடமாகக் கொண்ட விலங்குகள் வெப்பத்தாலும், நீரற்றும், நெருப்பில் கருகியும் இறந்துபோகும் மனதை உலுக்கும் புகைப்படங்கள் தினந்தினம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில்விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் பகுதிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன அமெரிக்காவைச் சேர்ந்த மக்ஸார் என்னும் விண்வெளி தொழில் நுட்ப நிறுவனம் ஒன்று ஆர்போஸ்ட் என்னும் சுற்றுலா நகரை எடுத்த புகைப்படம் முழுவதும் அடர்த்தியான கரும்புகை சூழ்ந்திருக்கிறது டாஸ்மன் கடலுக்குமே லே சுமார் 433 கிலோமீட்டர் உயரத்திலிருந் து சர்வேதேச விண்வெளி நிலையத்தால் படம் பிடிக்கப்பட்ட மற்றொரு புகைப்படம் சிட்னி நகரைச் சுற்றிப் பரவி இருக்கும் காட்டுத்தீயைத் தெளிவாகக் காட்டுகிறது