ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்..!
ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி என மாதத்துக்கு 8 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, ஆவணி மாத பௌா்ணமி வழிபாட்டுக்கு சதுரகிரி செல்லத் தடை விதிக்கப்பட்டது. ஆவணி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் செப்.3-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலை மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.