ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

  மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.30) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

   இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச. 30) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்.

   வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 29-ஆம் தேதி) தமிழகத்துக்கு இப்போதுவரை கிடைக்க வேண்டிய மழை அளவு 445.1 மி.மீ. ஆனால், தற்போது வரை 453.0 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது இயல்பை விட 2 சதவீதம் அதிகம் என்றாா் அவா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!