வாழையிலை குளியல்
வாழையிலை குளியல்
1.உடல் எடை சீராக இருக்கும்
2.உடலில் உள்ள கெட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்
3.தோல் நோய்கள் குணமாகும்
4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன் போன்ற நோய்கள் கட்டுப்படும்
5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும்
6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்
7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்
8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்
9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்
10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.!
இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்.! குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணிவரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்.! கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.! வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும்.!
வாழைகுளியலின்போது இருபது நிமிடத்திற்குள்ளாகவே வெப்பம் அதிகமாக உணரப்பட்டால் வாழையின் மேலே கொஞ்சம் நீரை தெளித்து கொள்ளலாம். இலையின் உள்ளிருப்பவர் பொறுக்க முடியாத அளவு சிரமமாக உணர்ந்தால் அவரை வெளியேற்றி விடலாம். குளியலின் போது வெறும் டவ்வல் அல்லது ஜட்டியை மட்டுமே அணிந்து கொள்ளலாம். பெண்கள் குறைந்த பட்ச பருத்தி ஆடைகளை அணிந்துகொள்ளலாம். இயற்கையின் ஆற்றல் அளவிட முடியாதது நண்பர்களே அதை முழுவதுமாக பயண்படுத்தி கொண்டு. கெட்ட பின் விளைவுகளை தரும் மருத்துவ முறைகளை முற்றிலும் தவிர்த்து, வெளிநாட்டு இரசாயண மருந்துகளின் குப்பைத் தொட்டியாக நம் உடலை ஆக்காமல் இறை உறையும் ஆலயமாக அதை மாற்றுவது நமது கைகளில் தான்இருக்கிறது.!
அதீத மன அழுத்தம், மனக்கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள், முற்றிய நிலையில் உள்ள இதய நோயாளிகள் வாழை இலை குளியல் எடுப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும். மற்றபடி 10 வயது முதல் நூறு வயதுவரை உள்ள ஆண், பெண் அனைவரும் வாழையில் குளியல் செய்து உடலில் பிராண சக்தியை அதிகரிக்கலாம்.!