பெட்ரோல் விலை: அசால்டாய் பெட்ரோலை முந்தும் டீசல்!

 பெட்ரோல் விலை: அசால்டாய் பெட்ரோலை முந்தும் டீசல்!

   நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இந்த சூழலில் சில தினங்களாக டீசல் விலையில் கிடுகிடு ஏற்றம் உண்டாகியுள்ளது.

    நாடு முழுவதும் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை  நிர்ணயம் செய்யும் முறை நடைமுறையில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.

    இம்முறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதற்கான பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.


     இந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவிடுகிறது.

   அந்த வகையில் சென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் அடையாமல லிட்டருக்கு ரூ.77.70ஆக விற்கப்படுகிறது

   ஆனால் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று 16 காசுகள் கூடிய நிலையில் இன்று ஒரே நாளில் 18 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.71.27 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

     சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் வாகன ஓட்டிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மற்ற பொருள்களின் விலையும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...