வரலாற்றில் இன்று – 28.12.2019 திருபாய் அம்பானி
இந்தியத் தொழிலதிபர் திருபாய் அம்பானி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் சோர்வாத் அருகிலுள்ள குகஸ்வாடாவில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி.
இவர் மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, இந்திய வர்த்தக உலக ஜாம்பவான் எனப் புகழ் பெற்றவர்.
1982ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர் 1996, 1998 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட (பவர்-50) ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும், இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
ரிலையன்ஸ் என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, பங்குசந்தைகளின் முடிசூடா மன்னனாக விளங்கிய திருபாய் அம்பானி 2002ஆம் ஆண்டு மறைந்தார்.