சுனாமி 15-ஆம் ஆண்டு நினைவு நாள்:
நாகை மாவட்டத்தில் 21 இடங்களில் மலரஞ்சலி:
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 15-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
2004-ம் ஆண்டு டிச. 26-ம் தேதி காலை 6.29 மணிக்கு இந்தோனிஷியாவின் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டேர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் சுனாமியாக உருவெடுத்து, சொல்ல முடியாத சோகங்களையும், கணக்கிட முடியாத இழப்புகளையும் ஏற்படுத்தியது.