உடல்நலம்
கால்சியம் சத்து அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்…
ஆரோக்கியமான எலும்புகளைப் பெற கால்சியம் சத்து இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
பொதுவாக கால்சியம் குறைபாடானது, ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். மாதவிடாய் காரணமாக, பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். பிரசவத்தின்
போதும் நிறைய கால்சியம் போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள், கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்களைப் பற்றி இப்போது பார்ப்போமா…
பால்
பாலில் கால்சியம் அதிகம் நிறைந்தது. அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.
தயிர்