ஆன்லைனில் இணைப்பது எப்படி?

 ஆன்லைனில் இணைப்பது எப்படி?

ஆதாருடன் – பான் நம்பரை இணைக்க… இந்த நாள் தான் கடைசி… ஆன்லைனில் இணைப்பது எப்படி?

    ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது


   இந்தியாவில் 12 இலக்க அடையாள எண் கொண்ட ஆதார் அட்டை மூலம், வங்கி கணக்கு தொடங்குவது, மானியங்களை பெறுதல் உள்ளிட்ட செயல்களுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த ஆதார் எண்ணை, வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான பான் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை கூறி வருகிறது.

   இந்த இணைப்பிற்காக ஏற்கனவே 5 முறை காலக்கெடு அளித்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

   இந்நிலையில் டிசம்பர் 31-ம் தேதியுடன் 3 மாத கால அவகாசம் முடிவடைவதால், அன்றைய தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்றமும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், பான் எண் பெறவும் ஆதார் கட்டாயம் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

 இணையதளம் மூலம் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

1. https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html என்ற இணையதளத்துக்கு செல்லவும்.

2. Link Aadhaar என்ற திரை தோன்றும்.

3. திரையில் தோன்றும் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.

ஆதார் மற்றும் பான் கார்டுகளில் உள்ள பெயர் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...