மனிதன்கற்றுக்கொள்ள வேண்டிய_21பாடங்கள் ..!- படித்ததில் ரசித்தது

 மனிதன்கற்றுக்கொள்ள வேண்டிய_21பாடங்கள் ..!- படித்ததில் ரசித்தது
மனிதன்கற்றுக்கொள்ள வேண்டிய_21பாடங்கள் ..!

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,

கொக்கிடம் இருந்து இரண்டையும்,

கழுதையிடம் இருந்து மூன்றையும்,

கோழியிடம் இருந்து நான்கையும்,

காக்கையிடம் இருந்து ஐந்தையும்,

நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 – சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது,

நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 – கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 – கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும்,

வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்,

தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 – விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல்,

தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 – இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல்,

தேவையான பொருள்களை சேமித்து வைத்தல்,

யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல்,

தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 – கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல்,

உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல்,

நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல்,

தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...