வரலாற்றில் இன்று (16.06.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜூன் 16 கிரிகோரியன் ஆண்டின் 167 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 168 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 198 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

363 – உரோமைப் பேரரசர் யூலியான் டைகிரிசு ஆறு வழியே பின்வாங்கி, தமது சரக்குக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார். உரோமைப் படைகள் பாரசீகரிடம் இருந்து பெரும் இழப்புகளைச் சந்தித்தன.
632 – மூன்றாம் யாசுடெகெர்டு சாசானியப் பேரரசின் மன்னராக முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் (இன்றைய ஈரான்) கடைசி அரசராவார்.
1487 – ரோசாப்பூப் போர்களின் கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது.
1586 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி, இரண்டாம் பிலிப்பைத் தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.
1654 – சுவீடனின் கிறித்தீனா மகாராணி முடி துறந்தார். பத்தாம் சார்லசு குசுத்தாவ் புதிய மன்னராக முடிசூடினார்.
1745 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: நியூ இங்கிலாந்து குடியேற்றப் படையினர் புதிய பிரெஞ்சு லூயிசுபேர்க் கோட்டையைக் கைப்பற்றினர்.
1773 – வங்காளம் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முதன்மை மாகாணமானது. உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது.[1][2]
1779 – எசுப்பானியா பெரிய பிரித்தானியா மீது போரை அறிவித்தது. ஜிப்ரால்ட்டர் மீதான போர் ஆரம்பமானது.
1819 – குசராத்து மாநிலம், கச்சு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,550 பேர் உயிரிழந்தனர்.[3]
1846 – ஒன்பதாம் பயசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவரே நீண்ட காலம் (32 ஆண்டுகள்) பதவியில் இருந்த திருத்தந்தை ஆவார்.
1883 – இங்கிலாந்தில் விக்டோரியா நாடக அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
1897 – அவாய் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் ஒப்பந்தம் எழுதப்பட்டது.
1903 – போர்ட் தானுந்து நிறுவனம் நிறுவனமயப்படுத்தப்பட்டது.
1903 – ருவால் அமுன்சென் தனது முதலாவது வடமேற்குப் பெருவழியின் கிழக்கு-மேற்கு நோக்கிய கடற்பயணத்தை ஒசுலோவில் இருந்து ஆரம்பித்தார்.
1911 – ஐபிஎம் நிறுவனம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.
1911 – 772 கிராம் எடையுள்ள விண்வீழ்கல் விஸ்கொன்சின் கில்போர்ன் நகரில் வீழந்தது.
1922 – அயர்லாந்து சுயாதீன மாநிலத்தில்திடம்பெற்ற பொதுத்தேர்தலில் சின் பெயின் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.
1940 – லித்துவேனியாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்தது.
1944 – ஐக்கிய அமெரிக்கா 14-வயது ஜார்ஜ் ஸ்டின்னி என்பவரை தூக்கிலிட்டது.
1948 – மலாயன் கம்யூனிச்டுக் கட்சி உறுப்பினர்கள் மூன்று பிரித்தானியத் தோட்ட அதிகாரிகளைக் கொன்றதை அடுத்து அங்கு அவசர காலச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
1955 – அர்கெந்தீனாவில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில் 364 பேர் கொல்லப்பட்டனர், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
1958 – 1956 அங்கேரியப் புரட்சியில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1963 – வஸ்தோக் 6: உருசியாவின் வலன்டீனா டெரெஷ்கோவா விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
1976 – தென்னாபிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
1997 – அல்சீரியாவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 50 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
2010 – பூட்டான் புகையிலைப் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்த முதலாவது நாடானது.
2012 – ஐக்கிய அமெரிக்க வான்படையின் தானியங்கி போயிங் எக்ஸ்-37 விண்ணூர்தி 469-நாள் பயணத்தின் பின்னர் பூமி திரும்பியது.
2012 – சீனா சென்சூ 9 விண்கலத்தை லியு யங் என்ற பெண் உட்பட மூவருடன் வெற்றிகரமாக ஏவியது.
2013 – வட இந்திய மாநிலமான உத்தராகண்டத்தில் பெரும் வெள்ளம், நிலச்சரிவுகள் இடம்பெற்றதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டன.

பிறப்புகள்

1723 – ஆடம் சிமித், இசுக்கொட்டிய மெய்யியலாளர், பொருளியலாளர் (இ. 1790)
1829 – யெரொனீமோ, அமெரிக்க பழங்குடித் தலைவர் (இ. 1909)
1888 – அலெக்சாந்தர் ஃபிரீடுமேன், உருசிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1925)
1891 – விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1952)
1893 – கருமுத்து தியாகராஜன் செட்டியார், தமிழகத் தொழிலதிபர் (இ. 1974)
1896 – கோட்டா ராமசுவாமி, இந்தியத் துடுப்பாட்டக்காரர் (இ. 1990)
1902 – ஜியார்ஜ் கேலார்ட் சிம்ப்சன், அமெரிக்கத் தொல்லியலாளர் (இ. 1984)
1902 – பார்பரா மெக்லின்டாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1992)
1917 – கேத்தரின் கிரகாம், அமெரிக்கப் பதிப்பாளர் (இ. 2001)
1921 – அலெக்சாந்தர் சுதக்கோவ், சோவியத் உருசிய இயற்பியலாளர் (இ. 2001)
1924 – டி. ஆர். மகாலிங்கம், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் (இ. 1978)
1930 – வில்மோஸ் சிக்மண்ட், அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் (இ. 2016)
1934 – குமாரி கமலா, தென்னிந்திய நடிகையும், பரதநாட்டியக் கலைஞர், பாடகி
1937 – எரிக் செகல், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2010)
1940 – என். சந்தோசு எக்டே, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி
1950 – மிதுன் சக்கரவர்த்தி, இந்திய நடிகர், அரசியல்வாதி
1958 – அபு சயாப் ஆத்திரேலிய போர்வீரர், இசைக்கலைஞர்
1971 – டூப்பாக் ஷகூர், அமெரிக்க ராப் இசைக்கலைஞர், தயாரிப்பாளர் (இ. 1996)
1986 – அஞ்சலி, தென்னிந்திய நடிகை

இறப்புகள்

1925 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1870)
1940 – யோசப் மைசிட்டர், லூயி பாஸ்டர் கண்டுபிடித்த விசர்நாய்க் கடி தடுப்பூசி மருந்தை தன் மேல் செலுத்தி சோதனை செய்த முதலாவது நபர் (பி. 1876)
1944 – பிரபுல்ல சந்திரராய், வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், சமூக சேவையாளர் (பி. 1861)
1977 – வெர்னர் வான் பிரவுன், செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1912)
2015 – சார்லசு கோர்ரியா, இந்தியக் கட்டிடக்கலைஞர் (பி. 1930)
2016 – எலன் ஜோ காக்சு, ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1974)
2017 – எல்முட் கோல், செருமனியின் 6வது அரசுத்தலைவர் (பி. 1930)

சிறப்பு நாள்

தந்தையர் தினம் (சீசெல்சு)
பன்னாட்டு ஆப்பிரிக்கக் குழந்தை நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!