கார்ல் ஜங் காலமான தினமின்று

 கார்ல் ஜங் காலமான தினமின்று

கார்ல் ஜங் காலமான தினமின்று😢

1875 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த கார்ல் ஜங் சுவிட்சர்லாந்து நாட்டினைச் சேர்ந்த மனநல மருத்துவராவார். பகுப்பாய்வு உளவியல் இவராலேயே துவங்கப்பட்டது. பின்னாளில் அறியப்பட்ட உளவியலின் பல முக்கிய கருத்தாக்கங்கள் இவரால் உருவாக்கப்பட்டவையே.

இவரது கருத்துகள் உளவியல் துறையில் மட்டுமின்றி தத்துவம், மானிடவியல், தொல்லியல், இலக்கியம் மற்றும் சமயம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மிகச்சிறந்த எழுத்தாளரான இவரது படைப்புகளில் பல இவரது காலத்திற்கு பின்னரே வெளிவந்தன. உளவியல் வரலாற்றில் மிக முக்கியமானவராக கருதப்படுகிறார்.

1961 இதே ஜூன் 6இல் மறைந்த அன்னாரின் வெற்றி மொழிகளில் சில

👏 துன்பத்தின் மூலம் சமநிலைப் படுத்தப்படவில்லை என்றால் “மகிழ்ச்சி” என்ற வார்த்தை அதன் பொருளை இழக்க நேரிடும்.

👏 நம்மால் எதையும் மாற்ற முடியாது, அதை நாம் ஏற்றுக்கொள்ளும் வரை.

👏 வலி இல்லாமல் உணர்வுநிலை எதுவும் வருவது கிடையாது.

👏 வெளிப்புறத்தை காண்பவர்கள் கனவு காண்கிறார்கள்; உள்மனதை காண்பவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்.

👏 மனிதனுக்கு சிரமங்கள் தேவைப்படுகிறது; அவைகள் ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

👏 மற்றவர்கள் பற்றி நமக்கு எரிச்சலூட்டும் அனைத்தும் நம்மை புரிந்துகொள்வதில் நம்மை வழிநடத்தும்.

👏 அர்த்தமற்ற பெரிய விஷயங்களை விட, அர்த்தமுள்ள சிறிய விஷயங்கள் வாழ்க்கையில் அதிக மதிப்புடையது.

👏 உங்களது சொந்த அறியாமையை தெரிந்துகொள்வதே, அடுத்தவர்களின் அறியாமையை கையாள்வதற்கான சிறந்த முறையாகும்.

👏 எல்லாவற்றிற்கும் வாக்குறுதிகளை அளிக்கும் ஒருவர், உறுதியாக எதையும் நிறைவேற்றப் போவதில்லை.

👏 நாம் விஷயங்களை எப்படி பார்க்கிறோம் என்பதை சார்ந்தே அனைத்தும் உள்ளதே தவிர அவை எப்படி உள்ளன என்பதில் அல்ல.

👏 உங்களால் உங்கள் சொந்த மனதை ஆராயமுடியும்போது மட்டுமே உங்கள் பார்வை தெளிவானதாக இருக்கும்.

👏 அன்பு ஆளுகின்ற இடத்தில், அதிகாரத்திற்கு இடமில்லை; அதிகாரம் மேலோங்கியுள்ள இடத்தில், அன்பு இல்லை.

May be a black-and-white image of 1 person and studying

All reactions:

88

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...