கல்கி 2898 ஏ.டி.. டிரைலர் ரிலீஸ் தேதி படக்குழு அறிவிப்பு..!

 கல்கி 2898 ஏ.டி.. டிரைலர் ரிலீஸ் தேதி படக்குழு அறிவிப்பு..!

பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் அமைத்துக் கொண்டவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த சலார் திரைப்படம் ஓவர் பில்டப் என விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்ட பின்னரும் கூட, இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆவல் உள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் “கல்கி 2898 ஏ.டி”. இப்படம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற மற்றொரு காரணம் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கின்றார் என்பதுதான். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 ஏ.டி படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் உள்ள மிகப்பெரிய ஸ்டார்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், நடிகர்களுக்கான சம்பளத்திற்கே அதிகப்படியான பொருட்செலவை தயாரிப்பு நிறுவனம் செய்துள்ளது. கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸூடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார்அமிதாப்பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், அதிரடிக்கு பெயர்போன நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகின்றார்.

வழக்கமாக ஒரு படத்தின் கதைக்களத்திற்குச் சென்று அங்குள்ள இசைக்கருவிகளை வைத்து இசையமைக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இந்த படத்தில் என்ன மாதிரியான சம்பவத்தைச் செய்துள்ளார் என்பதை காணவே ரசிகர்கள் பலர் காத்துக்கொண்டு உள்ளனர். குறிப்பாக பல சூப்பர் ஸ்டார்கள் நடித்திருப்பதால் பின்னணி இசையில் என்ன செய்யப்போகின்றார் என்ற கேள்வியும், அவரைச் சுற்றிக்கொண்டு உள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதிதியை படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் 10ஆம் தேதி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகவுள்ளது என தெரிவிக்கப்பட்டிருப்பதால், ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர். மேலும், 10ஆம் தேதியில் எந்த நேரத்தில் ரிலீஸ் ஆகும் என்பதை படக்குழு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடவில்லை. ஏற்கனவே படக்குழு தரப்பில் படம் வரும் 27ஆம் தேதி ரிலீசாகவுள்ளது என தெரிவித்திருந்தது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...