INDIA கூட்டணி தலைவர்கள் டெல்லியில் இன்று ஆலோசனை..!

 INDIA கூட்டணி தலைவர்கள் டெல்லியில் இன்று ஆலோசனை..!

இன்று நடைபெறும் INDIA  கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.  தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.  மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான INDIA கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ந்நிலையில் INDIA கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இக்கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி,  ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்க இருக்கின்றனர்.  INDIA கூட்டணி கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கவும்,  அடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதா? எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகிறோமா? என்பதை பற்றி ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...