வரலாற்றில் இன்று ( 02.06.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சூன் 2  கிரிகோரியன் ஆண்டின் 153 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 154 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 212 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

455 – உரோமை நகரம் வன்முறையாளர்களால் இரண்டு வாரங்கள் முற்றுகையிடப்பட்டு சூறையாடப்பட்டது.
1098 – முதலாவது சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முதலாவது முற்றுகை முடிவுக்கு வந்தது. சிலுவைப் போராளிகள் நகரைக் கைப்பற்றினர்.
1615 – பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர்.
1805 – நெப்போலியப் போர்கள்: பிரெஞ்சு-எசுப்பானியக் கடற்படையினர் பிரித்தானியரிடம் இருந்து பிரான்சுக் கோட்டைக்குச் செல்லும் வழியில் டயமண்ட் குன்று என்ற ஆளில்லாத் தீவைக் கைப்பற்றினர்.
1835 – பி. டி. பர்னம் ஐக்கிய அமெரிக்காவிற்கான தனது முதலாவது வட்டரங்கு சுற்றை ஆரம்பித்தார்.
1896 – மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த கம்பியில்லாத் தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1919 – அமெரிக்காவின் எட்டு மாநிலங்களில் அரசுக் கிளர்ச்சியாளர்கள் குண்டுகளை வீசினர்.
1924 – ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த அனைத்துப் பழங்குடிகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அரசுத்தலைவர் கால்வின் கூலிஜ் அறிமுகப்படுத்தினார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படையினர் கொண்டொமாரி கிராமத்தில் கிரேக்கக் குடிமக்களைக் கொன்றனர்.
1946 – இத்தாலியில் முடியாட்சியைக் குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மூன்றாம் உம்பெர்த்தோ மன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.
1953 – இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியத்தின் மகாராணியாக முடிசூடினார். தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட முதலாவது பெரிய பன்னாட்டு சர்வதேச நிகழ்வு இதுவாகும்.
1955 – சோவியத் ஒன்றியமும் யுகோசுலாவியாவும் பெல்கிறேட் உடன்பாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே 1948 இல் அறுந்து போன உறவைப் புதுப்பித்தன.
1962 – சிலி, இத்தாலி அணிகளுக்கு இடையே நடந்த 1962 உலகக்கோப்பை காற்பந்துப் போட்டி ஒன்றில் விளையாட்டு வீரர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்புகளை அடக்கக் காவல்துறையினர் பல முறை அழைக்கப்பட்டனர்.
1964 – பலத்தீன விடுதலை இயக்கம் அமைக்கப்படட்து.
1965 – வியட்நாம் போர்: முதலாவது தொகுதி ஆத்திரேலியப் படைகள் தென் வியட்நாமை அடைந்தது.
1966 – நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
1967 – மேற்கு செருமனியில் ஈரானின் அரசுத்தலைவரின் வருகைக்கு எதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1979 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் போலந்துக்குப் பயணம் மேற்கொண்டார். பொதுவுடைமை நாடொன்றிற்குச் சென்ற முதலாவது திருத்தந்தை இவராவார்.
1983 – டெக்சசில் இருந்து மொண்ட்ரியால் நோக்கிச் சென்ற எயார் கனடா வானூர்தி விபத்துக்குள்ள்ளானதில் 23 பயணிகள் உயிரிழந்தனர்.
1999 – பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
2003 – வேறொரு கோளுக்கான (செவ்வாய்) மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனது முதலாவது விண்கலத்தை ஐரோப்பிய ஆய்வு மையம் ஈசா கசக்ஸ்தானில் பைக்கனூரில் இருந்து ஏவியது.
2012 – முன்னாள் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் 2011 எகிப்தியப் புரட்சியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவி விட்ட குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2014 – தெலுங்கானா அதிகாரபூர்வமாக இந்தியாவின் 29-வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

பிறப்புகள்

1535 – பதினொன்றாம் லியோ (திருத்தந்தை) (இ. 1605)
1835 – பத்தாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1914)
1840 – தாமஸ் ஹார்டி, ஆங்கிலேய புதின எழுத்தாளர், கவிஞர் (இ. 1928)
1923 – இலாயிடு சேப்ளி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கக் கணிதவியலாளர், பொருளியலாளர் (இ. 2016)
1942 – டென்மார்க் சண், ஈழத்து திரைப்பட இசையமைப்பாளர்
1943 – இளையராஜா, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
1949 – கீத்தர் கூப்பர், ஆங்கிலேய வானியலாளர், இயற்பியலாளர்
1955 – நந்தன் நிலெக்கணி, இந்தியத் தொழிலதிபர்
1955 – மணிரத்னம், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
1965 – மார்க் வா ஆத்திரேலியத் துடுப்பாளர்
1965 – ஸ்டீவ் வா, ஆத்திரேலியத் துடுப்பாளர்
1972 – வெண்ட்வொர்த் மில்லர், அமெரிக்க நடிகர்
1978 – டோமினிக் கூப்பர், ஆங்கிலேய நடிகர்
1985 – ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கை-இந்தியத் திரைப்பட நடிகை
1987 – அஞ்செலோ மத்தியூஸ், இலங்கைத் துடுப்பாளர்
1987 – சோனாக்சி சின்கா, இந்திய நடிகை
1988 – செர்கியோ அகுவேரோ, அர்செந்தீன காற்பந்தாட்ட வீரர்
1989 – ஸ்டீவ் சிமித், ஆத்திரேலியத் துடுப்பாளர்

இறப்புகள்

1986 – டி. எஸ். துரைராஜ், தமிழக மேடை நாடக, திரைப்பட நகைச்சுவை நடிகர் (பி. 1910)
1988 – ராஜ் கபூர், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1924)
2004 – தாம் மொரேசு, இந்திய ஆங்கிலக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1938)
2014 – துரைசாமி சைமன் லூர்துசாமி, இந்தியக் கத்தோலிக்க கர்தினால் (பி. 1924)
2015 – சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் (பி. 1941)
2017 – கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழகக் கவிஞர் (பி. 1937)

சிறப்பு நாள்

குழந்தைகள் நாள் (வடகொரியா)
பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!