9 மாவட்டங்களை தவிர்த்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்
தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்
விடுபட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும். மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில், தற்போது தேர்தல் நடைபெறாது. புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளி வரும் – தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு. இன்று வேட்பு மனு தாக்கல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் – சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி.
ஜனநாயகத்தை காக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசு முறையாக தேர்தலை நடத்த வேண்டும் – ஸ்டாலின்.