ஊரக பகுதிகளுக்கு மட்டுமே, தேர்தல் அறிவிப்பு
ஊரக பகுதிகளுக்கு மட்டுமே, தேர்தல் அறிவிப்பு! மேயர் பதவிக்கு நிர்வாக காரணங்களால், அறிவிப்பு வெளியிடவில்லை. நகரப்பகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை. ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிப்பு. நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்
புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில், வார்டு மறுவரையறை தேவைப்பட்டால் தேர்தலுக்கு பின் நடத்தப்படும்.தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு. முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். 2ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர் .
அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குவதில் முன்னுரிமை வேட்பாளர் செலவு – கிராம ஊராட்சி தலைவருக்கு ரூ.34 ஆயிரம். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால், 3 ஆண்டுகள் போட்டியிட முடியாது.
ஊராட்சி பதவிகளுக்கு, 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு. 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமனம்.