இன்றைய முக்கிய செய்திகள்

 இன்றைய முக்கிய செய்திகள்
கோவை அருகே வீடுகள் இடிந்து 15 பேர் உயிரிழப்பு!.

கோவை, மேட்டுப்பாளையம், நடூர் என்ற கிராமத்தில் மழையினால், 4 வீடுகள் இடிந்து 4 பெண்கள், சிறுமி உள்பட 15 பேர் உயிரிழப்பு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் வீடுகள் இடிந்து விபத்து: உயிரிழப்பு 17ஆக அதிகரிப்பு.

இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: தேதி அறிவிப்பு! டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல்! 
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு! 

டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது – மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி. 6ம் தேதி வேட்புமனு தாக்கல். 13ம் தேதி செய்ய கடைசி நாள். ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை.

மாவட்ட, ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் 11.1.2020 அன்று நடைபெறும், ஊராட்சி வார்டு, ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் ஒரே நாளில் நடைபெறும்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை அடுத்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. 

கோவை மாவட்டத்தில், 17 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து, தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு.

குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் மூடல் அகமதாபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை ஆசிரமத்தில் இருந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிரடியாக வெளியேற்றம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். நகர்ப்புறப் பகுதிகளுக்கு பொருந்தாது – மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்.

மேட்டுப்பாளையம்-சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் – நடுவூர் பகுதிமக்கள் சாலை மறியல்.

குட்கா வழக்கு – காவல் கண்காணிப்பாளர் விமலா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர். குட்கா வழக்கு தொடர்பாக 12 காவல்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனும் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...