நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!

 நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
       உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்த திமுக செய்யும் முயற்சிகள் பலிக்காது- முதல்வர் பழனிசாமி.
 
         நீங்க நடத்த விடலன்னு அவங்க… அவங்க நடத்த விடலன்னு  நீங்க… மகாராஷ்டிரா தேர்தல் கூத்த விட தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் கூத்து இன்னும் சிறப்பா இருக்கும் போலயே…
*****************************************
        அயோத்தியில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ள ராமர் கோயில் இரு சமூகத்தினர் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தி அமைதியான சூழலை நிலவச் செய்யும். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
         வேறுபட்ட இரு சமூகத்தினருக்கு இடையில இருக்கிற பிரச்சின சரியாக கோயில் கட்டினா போதும்…. பேசாம நாடு பூரா அங்கங்க கோயில் கட்டிருங்க ….எதுக்கு நீதிமன்றம், சட்டம்?!?! நீங்க சொல்றதுதானுங்க  சரி… ஏன்னா கொஞ்ச நாளா நாட்டுல அந்த வேலதான நடக்குது….
*******************************************
         நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை குறிப்பிடும்படியாக இல்லை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் .
         
          இவரு அரசாங்க மருத்துவமனைகள் பக்கமே போயிருக்க மாட்டாரோ…..இல்ல ஒருவேளை இவரு பக்கத்து நாட்ட பத்தி பேசுறாரோ?!?!…
*******************************************
        போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானிக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது .
        
         பின்ன……மொத்த இந்தியாவையும் குத்தகைக்கு எடுத்துருக்கீங்க…. குடுத்துருக்காங்க….. இது கூட பண்ணலைனா எப்படி..?!?!
*********************************************

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...