மிக மோசமாக மாசடைந்த டெல்லியில், இந்த `ஆக்ஸிஜன் பார்` உங்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வழங்குகிறது
மழைக்காலமாக இருப்பதால், வெப்பநிலை குறைவாக இருக்கிறது என்றும், காற்று வீசும் திசையில் மாறுபாடுகள் இருப்பதால், ஆங்காங்கே மாசுபாடு புகைமூட்டமாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தபோதும், டெல்லியில் உள்ள மாசுபாடு நிலை, சில ஆண்டுகளில் சென்னை நகரத்திற்கும் ஏற்படுமா என சென்னைவாசிகள் பலரையும் யோசிக்கவைத்துள்ளது.
”அண்டை மாநிலங்களில் விவசாய நிலங்களில் கழிவுகளை எரிப்பதால், டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. சென்னையில் உள்ள பிரச்னையை டெல்லியில் உள்ள பிரச்னையோடு ஒப்பிட்டு பார்க்கமுடியாது. சென்னை நகரத்தில் புதிய கட்டுமானங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே இயங்கிவரும் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாடு, மெட்ரோ ரயில் கட்டுமானம், ஒவ்வோர் ஆண்டும் இருசக்கர வாகனங்கள் அதிகரித்துவருவது போன்ற காரணங்களால் சென்னையில் சமீப காலங்களில் மாசுபாடு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு டெல்லியில் உள்ள மாசுபாடு விவாதத்திற்கு உள்ளாகிவிட்டதால், சென்னை நகரவாசிகளும் கவனிக்க தொடங்கியுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது,”என்கிறார் சுத்தமான காற்றுக்கான மருத்துவர்கள் அமைப்பை (Doctors for clean air) சேர்ந்த மருத்துவர் ஜி.சந்திரசேகர்.
சென்னையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக நிறுவப்பட்டுள்ள நான்கு கருவிகள் காற்று மாசுப்பாட்டை கண்காணிக்கின்றன என்றும், தமிழக அரசின் சார்பாக உடனடியாக மாசுபாட்டை அறிந்துகொள்ளும் கருவிகள் நிறுவப்படவில்லை என்கிறார் அவர்.
”தமிழக அரசு நிறுவியுள்ள எட்டு கருவிகள் ஒரு வாரம் கழித்து மாசு அளவுகளை தரும். இந்த அளவுகளை தெரிந்துகொள்வதால் எந்த பயனும் நமக்கு இல்லை. உடனடியாக மாசு அளவை தெரிந்துகொள்ள சென்னை போன்ற நகரத்திற்கு குறைந்தபட்சம் 60 கருவிகள் தேவை. சென்னை நகரம் விரிவடைந்து வருகிறது என்பதால் முக்கிய இடங்களில் இந்த கருவிகளை நிறுவினால்தான் நம் நகரத்தில் என்ன பிரச்சனை, எதனை சரிசெய்யவேண்டும் என தெரியும். பிரச்சனையின் ஆழம் தெரியாமல், நம் ஊரில் பிரச்சனை இல்லை என சொல்லமுடியாது
அதற்கு முன்னுதாரணமாக தற்போது விற்பனைக்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது டெல்லி தமிழகத்தின் மற்ற மாநிலங்களுக்கும் இந்நிலை அவசியம் வரலாம் ஆரோக்கியம் வியாபாரமாக்கப் பட்டபோது நோய்கள் பெருகியது உணவின் தேவை பெருகியபோது உடலின் ஒவ்வாமை அதிகரித்தது மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் விளைவை அறிவுறுத்தி தற்போது காற்று விற்பனைக்கு வந்துவிட்டது
15 நிமிடம் நீங்கள் வாசனை மிகுந்த ஆக்ஸிஜனை சுவாசிக்க 499 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 15 நிமிடம் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசித்தால் உடம்பில் தீங்கான மாசுகளால் பரவிய நச்சு நீங்கும் என்கிறார் இந்த ஆக்ஸி பார் உரிமையாளர். ஆனால், இந்த ஆக்ஸி பாரில் பெரிய நன்மை ஏதும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
நாளடைவில் இது பெரிய வியாபார மார்கெட்டாக மாறும் அபாயம் உள்ளது