ஏழைகளின் முந்திரி – கட​லைமிட்டாய்

 ஏழைகளின் முந்திரி – கட​லைமிட்டாய்
கடலை மிட்டாயில் சேர்க்கப்படும் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட் நார்ச் சத்தும் கரையும் நல்ல கொழுப்பு

புரோட்டீன்
 வைட்டமின்கள்
 இரும்புச்சத்து
 கால்சியம்
 துத்தநாகம்
 மாங்கனீஸ்
 பாஸ்பரஸ்
 பொட்டாசியம்
 மற்றும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.

அதேபோன்று வெல்லத்தில் பல்வேறு சத்துக்களும் இரும்பு சத்தும் கால்சியமும்  அபரிமிதமாக உள்ளது. மேலும் நிலக்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்குத்  தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது தசைகளின் வலிமைக்கும் இது உதவுகிறது.  மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல இதிலுள்ள  விட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க  உதவும். எனவே கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்க வேண்டியது  மிக மிக அவசியம்.

வெல்லத்துடன் சேர்ந்து இதன் மருத்துவ  நன்மைகள் மேலும் அதிகரிக்கிறது. அதேபோன்று நிலக்கடலையில் ட்ரிப்டோபான்  என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம்  செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள்  உற்பத்திக்கு பயன்படுகிறது. இந்த செரட்டோன் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மன  அழுத்தத்தைப் போக்குகிறது. எனவே இந்த கடலை மிட்டாயை சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை எல்லோரும் அவசியம் சாப்பிட வேண்டும். நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும்  துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை  செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. மேலும் இரத்த ஓட்டம் சீராகிறது. மேலும்  இது மிகுந்த நார்சத்து உள்ளது என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. பொதுவாக  பாதாம் பிஸ்தா முந்திரிப்பருப்புகளில்  தான் சத்துக்களை விட நிலக்கடலையில் சத்துக்கள் மிக அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

அதனால்தான் இது ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல  இதனுடன் வெல்லம் சேருவதால் நன்மைகள் நமக்குக் இரட்டிப்பாக கிடைக்கிறது.  எனவே கெட்ட கொழுப்பில்லாத கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல்  அனைவருமே தினமும் சாப்பிட்டு வந்தால் பல உடல்நல நன்மைகள் எளிதாகப்  பெற்றுவிட முடியும். எனவே நமது பாரம்பரிய உணவான கடலை மிட்டாயை இனி அடிக்கடி  சாப்பிடுங்கள் நோய் இல்லாத வாழ்வை பெறுங்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...