வெற்றிலை நிவாரணி

 வெற்றிலை நிவாரணி

வெற்றிலை


கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என வகைகள் கொண்டது.

இலை சாற்றுடன் சிறிது  அளவு நீர் மற்றும் பால் கலந்து குடித்தால் , சிறுநீர் பிரியும்.

கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்ட , மூச்சுத்திணறல்,இருமல் சரியாகும். 

இலை சாற்றுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து, தேன் கலந்து கொடுக்க  குழந்தைகளுக்கு உண்டான சளி, இருமல் போன்றவை குணமாகும்.

வெற்றிலையை தீயில் வாட்டி, அதனுள் துளசி இலைகளை வைத்து, கசக்கி பிழிந்து சாறு எடுத்து, 10 மாத குழந்தைக்கு காலையும் மாலையும் 10 சொட்டு வீதம் கொடுத்து வந்தால் சளி, இருமல் குணமாகும். வெறும் இலையை தீயில் வாட்டி, மார்பில் பற்றிட  சளி குறையும். 

கம்மாறு வெற்றிலைச்சாறு 15 மி.லி எடுத்து அதனுடன் வெந்நீர் கலந்து குடித்து வந்தால், வயிற்று உப்புசம், மந்தம், தலைவலி, நீரேற்றம், வயிற்றுவலி குணமாகும். இலையில் ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, கட்டிகளின் மேல் வைத்து கட்ட கட்டிகள் உடைந்து சீழ் வெளியாகும். இரவில் கட்டுவது நல்லது.

கொழுந்து வெற்றிலையுடன் (ஒன்று) ஐந்து மிளகு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரம் சாப்பிட்டு வர இரைப்பை குடல்வலி, செரிமானம், மலச்சிக்கல் குணமாகும்.  இலையை தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்ட,  

குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் அதிகமாக சுரக்கவும், மார்பில் பால் கட்டுவதால் வரக்கூடிய வீக்கத்தை கரைக்கும்.

தேள் கடி விஷத்தை முறிக்க இரண்டு இலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டு, அத்துடன் தேங்காய்த்துண்டுகள் சிலவற்றையும் மென்று சாப்பிடவிஷ கடி குணமாகும்.  விஷப்பூச்சிகள் எது கடித்தாலும் குணமாகும்..

வெற்றிலை 4, வேப்பிலை ஒரு கைப்பிடி, அறுகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து, 500 மி.லி தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து 150 மி.லி ஆக வற்றியதும் வடிகட்டி, தினமும் மூன்று வேளை சாப்பிடும் முன்  குடித்து வர  சர்க்கரையின் அளவு குறையும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...