இன்றைய ராசி பலன்கள் – 21-11-2019 வியாழக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் – 21-11-2019 வியாழக்கிழமை

மேஷம்

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : கலகலப்பான நாள்.

பரணி : முயற்சிகள் ஈடேறும்.

கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.

—————————————


ரிஷபம்

மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளால் குழப்பமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்துக்களை கூறுவதை தவிர்க்கவும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : குழப்பமான நாள்.

ரோகிணி : அனுசரித்து செல்லவும்.

மிருகசீரிஷம் : கவனம் தேவை.

—————————————


மிதுனம்

வெளியூர் தொடர்பான பயணங்களினால் புதுவிதமான அனுபவம் கிடைக்க பெறுவீர்கள். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளின் மூலம் பெருமை அடைவீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.

திருவாதிரை : முன்னேற்றமான நாள்.

புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

—————————————


கடகம்

பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கையும், செல்வாக்கும் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த நகைகளை வாங்கி மனம் மகிழ்வீர்கள். மனை தொடர்பான கடன் உதவிகள் சாதகமாக அமையும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் லாபம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

பூசம் : உதவிகள் கிடைக்கும்.

ஆயில்யம் : லாபம் அதிகரிக்கும்.

—————————————


சிம்மம்

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இளைய சகோதரர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மகம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

பூரம் : அனுகூலமான நாள்.

உத்திரம் : கவலைகள் குறையும்.

—————————————


கன்னி

வாக்கு சாதுர்யத்தால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். புதிய வாகனம் மற்றும் மனை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். புதுவிதமான அனுபவத்தினால் வாழ்க்கையை பற்றிய புரிதல் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : பாராட்டப்படுவீர்கள்.

அஸ்தம் : செல்வாக்கு மேம்படும்.

சித்திரை : மாற்றமான நாள்.

—————————————


துலாம்

உத்தியோகத்தில் திருப்திகரமான சூழல் உண்டாகும். இட மாற்றத்திற்கான சிந்தனைகள் மேம்படும். சமூக சேவையில் இருப்பவர்களுக்கு வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கவனக்குறைவினால் அவப்பெயர்கள் ஏற்பட்டு மறையும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : திருப்தியான நாள்.

சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.

விசாகம் : கவனம் வேண்டும்.

—————————————


விருச்சிகம்

நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்துகொள்ளவும். சுயதொழிலில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நன்மையை அளிக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

கேட்டை : நன்மை உண்டாகும்.

—————————————


தனுசு

புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய இடங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். நவீன மின்சார பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : திறமைகள் வெளிப்படும்.

பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

—————————————


மகரம்

புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சுயதொழிலில் அதிக முதலீடு செய்யும்போது தகுந்த ஆலோசனை பெற்று முடிவு செய்யவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களால் உடல்சோர்வும், மனதில் ஒருவிதமான சஞ்சலமும் தோன்றி மறையும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...