கீரைகள்நீர்சத்துகாய்கறிகளை #மழைக்காலத்தில்_சாப்பிடலாமா…❓ #கூடாதா…❓

 கீரைகள்நீர்சத்துகாய்கறிகளை #மழைக்காலத்தில்_சாப்பிடலாமா…❓ #கூடாதா…❓
கீரைகள்நீர்சத்துகாய்கறிகளை #மழைக்காலத்தில்_சாப்பிடலாமா…❓ #கூடாதா…❓

மழைக்காலத்தில் கீரைகள், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய்……

போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சாப்பிட்டால் சளி பிடிக்கும், காய்ச்சல் வரும் என்று காலங்காலமாக சொல்லப்பட்டுவருகிறது. இதனால் நம்மில் பலர் அவற்றைச் சாப்பிடாமல் தள்ளிவைப்போம்.

இயற்கையாகவே, மழைக்காலத்தில் கீரைகள் அதிகமாக விளையும். எனவே, அவற்றை உண்பது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். பொன்னாங்கண்ணி, மூக்கிரட்டை, முருங்கை, தூதுவளை, பசலைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, புதினா, கறிவேப்பிலை போன்றவற்றில் பொட்டாசியம், இரும்பு, சோடியம், ஃபோலிக் ஆசிட் மற்றும் பல்வேறு தாது உப்புகள் நிறைந்திருக்கும்.

எனவே, அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அனைத்துக் கீரைகளிலும் ‘குளோரோபில்’ நிறைந்திருப்பதால், ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும். இதனால் மழைக்காலங்களில் வரக்கூடிய சாதாரண வைரஸ் காய்ச்சலிலிருந்து டெங்கு, எலிக்காய்ச்சல் என அனைத்து விதமான காய்ச்சல்களில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளிலும் வைட்டமின் ஏ, சி மற்றும் பல்வேறு விதமான தாது உப்புகள் நிறைந்துள்ளதால், அவை நோய் எதிர்ப்பு ஊக்கியாகச் செயல்படும். புடலங்காயில் உள்ள வேதிப்பொருள், மலேரியா காய்ச்சலைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. பீர்க்கங்காயில் சளி, ஆஸ்துமாவைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது.

மேலும், பீர்க்கங்காயில் பெப்டைட் (Peptide), ஆல்கலாய்டுகள் (Alkaloids) அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் சிறுநீர் இழப்பைச் சமன் செய்யும். அத்துடன், ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். லூபின் (Lupine) என்ற வேதிப்பொருள் இருப்பதால், கபசுரம், காலரா மற்றும் பல்வேறுவிதமான வைரஸ் காய்ச்சல்களுக்கு இது மிகச்சிறந்த நிவாரணியாக உள்ளது. பாகற்காயில் கசப்புத்தன்மை உள்ளதால், அது எல்லாவிதமான காய்ச்சலுக்கும் நோய் எதிர்ப்புத்திறனை அளிக்கும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...