யோக மஹா சிவராத்திரி

 யோக மஹா சிவராத்திரி

300 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் யோக மஹா சிவராத்திரி

ஜோதிட சாஸ்திரங்களின்படி 300 வருடங்களுக்குப் பிறகு

, இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம் யோகம், சுக்கிரப் பிரதோஷம் யோகம், மகா சிவராத்திரி யோகம், என்ற ஐந்து சிறப்பு யோகங்கள் கூடிவருகின்றது. சர்வார்த்தி ஸித்தி யோகம் சர்வார்த்த ஸித்தி யோகம் என்றால் உங்களுடைய எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கும் யோகம். இந்brock purdy jersey custom made football jerseys johnny manziel jersey penn state jersey detroit lions jersey,green bay packers jersey,eagles kelly green jersey,jersey san francisco 49ers College Football Jerseys colleges in new jersey custom football jerseys custom ohio state jersey Ohio State Team Jersey asu football jersey penn state jersey Florida state seminars jerseys oregon ducks jersey miami hurricanes jerseyத யோக நாளில் ஈசனை வழிபட காரியத் தடைகள் அகன்று எண்ணியவை எளிதாக நிறைவேறும்.

சிவ யோகம் :- சிவ யோகம் என்றால் தியானிக்கும் வேளை. இந்நாளில் செய்யப்படும் யோகா, தியானம், பிராணாயாமம், மந்திர ஜபம் ஆகியவைகளால் பன்மடங்கு பலன் கிடைக்கும். 2024 மகா சிவராத்திரி நாளன்று முழுவதுமாக சிவ யோகம் எனும் அற்புத வேளை கூடி வருகின்றது

. ஷிரவண நட்சத்திர யோகம் ஷிரவண நட்சத்திரம் சனி பகவானுக்கு உரியது. இந்த நட்சத்திரத்தில் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது மங்களகரமாக முடியும். இந்த மகா சிவராத்திரி நாளில் சனி பகவானையும், அவரை வழிநடத்தும் ஈசனையும் வழிபட்டால் உங்கள் தொழில், வியாபாரம், பதவி உயர்வு போன்ற விஷயங்கள் திருப்தியாக அமையும். மேலும் உங்கள் ஜாதகத்தில் உள்ள எல்லா விதமான நவகிரக தோஷங்களும் நீங்கி விடும்.

சுக்கிரப் பிரதோஷ யோகம் :- மகா சிவராத்திரி சுக்கிர வார பிரதோஷத்தில் வருவதால் பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்து செல்வவளம் சேரும். மகா சிவராத்திரி யோகம் :- விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரி விரதம். இதை . வரத பண்டிதம் போன்ற நூல்கள் இதன் மகிமையை விவரிக்கின்றன.

மகா சிவராத்திரி அன்று ஈசனைத் தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர், சங்கல்பம் செய்தவர் எல்லோருக்கும் நற்கதி கிடைக்கும் என புராணங்கள். தெரிவிக்கின்றன. ஐந்து சிறப்பு யோக வேளையும் கூடி வருகிற. இந்த மகா சிவராத்திரியில் விரதமிருந்து கண் விழித்து சிவதியானம் செய்திட எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பு உண்டாகும்

. சோபகிருது வருடம் மாசி மாதம் 25ம் தேதி (8-3-2024) வெள்ளி கிழமை தேய்பிறை சதுர்த்தசி திதியில் மஹா சிவரத்திரி வருகிறது. இந்த ஆண்டு விசேஷ ஐந்து யோகம் கூடும் நாள் என்பதால் முக்கியமாக இந்த 6 எளிய வழிபாட்டையும் செய்ய வேண்டும். விநாயகருக்கு அருகம்புல் சாத்தி அவரை முதலில் வணங்கினால் சித்த யோகம் உங்களை சிறப்பாக்கும். எல்லா தடைகளும் விலகும். சனீஸ்வரருக்கு எள்எண்ணெய் தீபம் ஏற்றி இந்நாளில் வணங்க ஷிரவண நட்சத்திர வேளை உங்களுக்கு சுபயோகத்தைக் கொண்டு வரும்.

சுக்கிர பிரதோஷம் மகா சிவராத்திரி நாளில் வருவதால் நந்தியெம்பெருமான் வழிபாடு நலம் சேர்க்கும். சர்வார்த்தி ஸித்தி யோக நாள் என்பதால் இந்நாளில் குலதெய்வ வழிபாடும் செய்து பித்ருக்களின் ஆசியால் வெற்றி பெறலாம். மகா சிவராத்திரி நாளில் இடர்களை நீக்கும் பதிகங்கள் பாடி ஈசனைத் தொழ வந்த தீ வினைகள் நீங்கும் . வரவிருப்பவை நலமாக அமையும். சர்வ யோகங்களையும் அருளும் இந்நாளில் சிவாலயத்தில் 4 கால பூஜைகளையும் கண்டு தரிசித்தால் இக, பர இன்பங்கள் யாவும் சேரும்

. மகா சிவராத்திரியன்று வீட்டிலேயே பூஜை செய்வதாக இருந்தால், அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகள் போன்றவற்றை செய்த பின், சிவன் கோயிலுக்குச் சென்று தரிசிக்க வேண்டும். வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால வழிபாடுகளை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, வைக்க வேண்டும். மாலை நேர வழிபாட்டை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் சிவலிங்கத்தை வைத்து ஜாமத்துக்கு ஒன்றாக நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்து வழிபட வேண்டும். அன்று நான்கு ஜாம வழிபாடு செய்ய முடியாவிட்டாலும், ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 10 -54 மணி முதல் 12-24 மணி வரை உள்ள காலத்திலாவது ” ஓம் சிவசிவ ஓம் ” என மனதுக்குள் உச்சரித்தபடி சிவனை வழிபட வேண்டும்

. ஐந்து யோகங்களும் ஒன்று கூடும் இந்த அபூர்வ மகா சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்யத் தவறாதீர்கள். நீங்கள் செய்யும் வழிபாடு ஈசனின் பரிபூரண அருளை பெற்றுத் தரும். உங்கள் வீட்டை பாதுகாப்பாக வைத்திருக்கும். உங்கள் வாரிசுகள் நலமோடு வாழ்வார்கள். இந்த மகா சிவராத்திரி காலத்தில் நீங்கள் இருக்கும் விரதம் உங்களையும் உங்கள் சுற்றத்தையும் செல்வ வளமாக்கும்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...