வரலாற்றில் இன்று – (07.03.2024)

 வரலாற்றில் இன்று – (07.03.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாOhio State Team Jersey custom football jerseys custom ohio state jersey College Football Jerseys deion sanders jersey oregon ducks jersey Florida state seminars jerseys rowan university new jersey keyvone lee jersey Ohio State Team Jersey College Football Jerseys florida jersey fsu jersey ohio state jersey Ohio State Team Jersey ழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 7 கிரிகோரியன் ஆண்டின் 66 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 67 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 299 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

161 – உரோமைப் பேரரசர் அந்தோனினசு பயசு இறந்தார். அவரது வளர்ப்பு மகன்கள் மார்க்கசு ஒரேலியசு, லூசியசு வெர்சசு ஆகியோர் புதிய பேரரசர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
321 – உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் ஞாயிற்றுக்கிழமையை ஐரோப்பாவில் ஓய்வு நாளாக அறிவித்தார்.
1573 – உதுமானியப் பேரரசுக்கும் வெனிசுக் குடியரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. உதுமானிய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. சைப்பிரசு உதுமானியரின் ஆளுமைக்குக் கீழ் வந்தது.
1799 – நெப்போலியன் பொனபார்ட் பாலத்தீனத்தின் யோப்பா பகுதியைக் கைப்பற்றினான். நெப்போலியனின் படையினர் 2,000 அல்பேனியக் கைதிகளைக் கொலை செய்தனர்.
1814 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடமேற்கு ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படையினரை வென்றனர்.
1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.
1900 – கம்பியில்லா சமிக்கைகளை கரைப் பகுதிக்கு அனுப்பிய முதலாவது கப்பலாக செருமனியின் கைசர் விலெம் டெர் குரொசி சாதனை படைத்தது.
1902 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவின் பூவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.
1912 – தென் முனையைத் தாம் 1911 டிசம்பர் 14 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார்.
1914 – அல்பேனியாவின் இளவரசர் வில்லியம் மன்னராக முடிசூட அல்பேனியா வந்து சேர்ந்தார்.
1918 – முதலாம் உலகப் போர்: பின்லாந்து செருமனியுடன் கூட்டுச் சேர்ந்தது.
1936 – இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது.
1941 – செருமனியின் யு-47 நீர்மூழ்கி அதன் மாலுமிகளுடன் காணாமல் போனது.[1]
1951 – ஈரான் பிரதமர் அலி ரசுமாரா தெகுரான் பள்ளிவாசல் ஒன்றில் வைத்து இசுலாமிய அடிப்படைவாதிகளான பெதயான் இ-இசுலாம் இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1951 – கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1965 – அமெரிக்கா, அலபாமா மாநிலத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட சுமார் 600 மனித உரிமை போராளிகள் மீது மாநிலக் காவல்துறை கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.
1968 – வியட்நாம் போர்: அமெரிக்க, தென் வியட்நாம் படைகள் மை தோ பகுதியில் இருந்து வியட்கொங் படைகளை வெளியேற்ற போர் நடவடிக்கையை ஆரம்பித்தன.
1971 – கிழக்குப் பாக்கித்தான் அரசியல் தலைவர் சேக் முஜிபுர் ரகுமான் டாக்காவில் நிகழ்த்திய தனது வரலாற்றுப் புகழ் மிக்க உரையில், “இந்த முறை போராட்டம் நமது விடுதலைக்கானது,” என அறிவித்தார்.
1986 – சாலஞ்சர் விண்ணோட விபத்து: பிரிசர்வர் கப்பலின் சுழியோடிகள் சாலஞ்சர் விண்ணோடத்தின் பயணியர் அறையைக் கண்டுபிடித்தனர்.
1987 – தைவானிய இராணுவம் லியூ என்ற இடத்தி 19 வியட்நாமிய ஏதிலிகளைப் படுகொலை செய்தனர்.
1989 – மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தது.
1996 – பாலத்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
2006 – லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் வாரணாசியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகளை வெடிக்க வைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் அவையின் உறுப்பினர்கள் 100% தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை வாக்களித்தது.
2007 – இந்தோனேசியாவின் யாகியகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடா விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் உயிரிழந்தனர்.
2009 – வட அயர்லாந்தில் குடியரசு இராணுவப் போராளிகள் இரண்டு பிரித்தானியப் போர்வீரர்களை சுட்டுக் கொன்று, மேலும் இருவரைக் காயப்படுத்தினர்.

பிறப்புகள்

1765 – யோசெப் நிசிபோர் நியெப்சு, ஒளிப்படவியலைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1833)
1792 – ஜான் எர்ழ்செல், ஆங்கிலேயக் கணிதவியலாலர், வானியலாளர் (இ. 1871)
1837 – என்றி டிரேப்பர், அமெரிக்க மருத்துவர், வானியலாளர் (இ. 1882)
1853 – வே. அகிலேசபிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1910)
1866 – கல்லடி வேலுப்பிள்ளை, ஆசுகவி, ஈழத்து எழுத்தாளர் (இ. 1944)
1886 – ப. அ. தோமசு, யாழ்ப்பாணம் தோலகட்டி சுவாமிகள், இறை ஊழியர் (இ. 1964)
1911 – அக்ஞேய, இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1987)
1919 – எம். என். நம்பியார், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2008)
1938 – ஆல்பெர்ட் ஃவெர்ட், பிரான்சிய இயற்பியலாளர்
1938 – டேவிட் பால்டிமோர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்
1944 – மைக்கேல் ரோபாஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர், மரபியலாளர்
1945 – தி. வே. சங்கரநாராயணன், தமிழகக் கருநாடக இசைப் பாடகர்
1949 – குலாம் நபி ஆசாத், இந்திய அரசியல்வாதி
1952 – விவியன் ரிச்சர்ட்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாளர்
1958 – ஆலன் ஏல், அமெரிக்க வானியலாளர்
1960 – பரத்வாஜ், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
1968 – ராஜூ சுந்தரம், இந்திய நடன இயக்குனர்
1970 – ரேச்சல் வய்ஸ், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை

இறப்புகள்

203 – பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா கிறித்தவ மறைசாட்சிகள்
1274 – தாமஸ் அக்குவைனஸ், இத்தாலியப் புனிதர், மெய்யியலாளர் (பி. 1225)
1625 – ஜோஹன் பாயர், செருமானிய நிலப்படவரைஞர் (பி. 1572)
1832 – இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூர் மராத்திய இராச்சிய மன்னர் (பி. 1777)
1924 – மூலம் திருநாள், திருவிதாங்கூர் மன்னர் (பி. 1857)
1952 – பரமஹம்ச யோகானந்தர், இந்திய குரு (பி. 1893)
1961 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 2வது முதலமைச்சர் (பி. 1887)
1969 – சம்பூர்ணாநந்தர், இந்திய அரசியல்வாதி (பி. 1891)
1982 – ஈதா பார்னி, அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1886)
1990 – சுத்தானந்த பாரதியார், கவிஞர், தமிழிசைப் பாடலாசிரியர் (பி. 1897)
1993 – டோனி ஹாரிஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1916)
1999 – இஸ்டான்லி குப்ரிக்கு, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1928)
2014 – பாலாஜி, திரைப்பட, சின்னத்திரை நகைச்சுவை நடிகர்
2020 – க. அன்பழகன், தமிழக அரசியல்வாதி (பி. 1922)

சிறப்பு நாள்

ஆசிரியர் நாள் (அல்பேனியா)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...