நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
நாட்டு சேதியும் !!!! நம்ம சேதியும் !!!
நாட்டு சேதி:
இலங்கை அதிபர் தேர்தலில் 13 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று கோத்தபய ராஜபக்சே வெற்றி .
நம்ம சேதி:
மறுபடியும் மொதல்ல இருந்தா அடக் கொடுமையே!!!
****************************
நாட்டு சேதி :
எனது தொகுதியில் வந்து அமைச்சர் உதயகுமார் நலத்திட்ட உதவிகள் வழங்குவதா? அதை நான் வேடிக்கை பார்ப்பதா? கூடாது. இதை நான் ஏற்கமாட்டேன்.__ அமைச்சர் செல்லூர் ராஜு.
முதல்வர் உத்தரவின் பேரில் தான் நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. அமைச்சர் செல்லூர் ராஜூ அதை தடுக்கக்கூடாது. __அமைச்சர் உதயகுமார்
மதுரையில் அமைச்சர்கள் மோதல்.
நம்ம சேதி:
யாரோ இருக்குற ஊர்ல யாரோதான் நாட்டாமையா இருப்பாங்கன்னு எங்க ஊர்ல சொன்ன பழமொழி இப்ப போய் ஞாபகத்துக்கு வருது….
***************************
நாட்டு சேதி:
13 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்ற கொலீஜியம் பெண் உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நம்ம சேதி:
தஹில் ரமாணிக்கே அந்தப் பாடு!!! கைப்பொம்மையா இல்லைனா பானுமதிக்கு என்ன பாடோ !?! கவனமா இருங்கம்மா…
***************************
நாட்டு சேதி:
தற்கொலை தீர்வல்ல.என்ன பிரச்சனைகள் இருந்தாலும் அதனை சமாளிக்கும் திறன் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். __ தெலுங்கானா கவர்னர் தமிழிசை.
நம்ம சேதி :
இன்னிக்கு தேதியில இத சொல்றதுக்கு சரியான ஆளு இவங்கதா பா .என்ன தான் வச்சு செஞ்சாலும் விட்டு தர்ராங்களா பாருங்க …..
*************************
நாட்டு சேதி:
வறுமை, தட்ப வெப்ப மாறுதல் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதில் உலக நாடுகளிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. __மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
நம்ம சேதி:
அய்யா !!!! சாமி !!! அந்த ‘எதிராகப் போராடுவதில்’ அப்படிங்கறத மாத்திட்டு ‘சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதில்’ அப்படீன்னு உங்க அறிக்கையை மாத்திக்க முடியுங்களா…..
**********************
நாட்டு சேதி:
மார்ச் மாதத்துக்குள் ஏர்-இந்தியா விற்கப்படும்.__ நிர்மலா சீதாராமன் தகவல்.
நம்ம சேதி:
மொத்த இந்தியாவையும் எப்பமா விக்க போறீங்க ???
********************************