குளிர்காலக் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்குகிறது!

 குளிர்காலக் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்குகிறது!

டிச.13ம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில், பொருளாதார மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் ஜம்மு – காஷ்மீரில் அரசியல் தலைவர்களை தொடர்ந்து காவலில் தடுத்து வைத்திருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் 2-ஆவது கூட்டத் தொடராகும். முதல் கூட்டத் தொடா் கடந்த ஜூன் 17-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது, உடனடி முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் மசோதா, தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் மசோதா, மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத நிலையில் அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, சிவசேனா, காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டு வரும் நிலையில், அம்மாநில விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்

முந்தைய கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடியாத குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தற்போதைய கூட்டத் தொடரில் மீண்டும் அறிமுகப்படுத்தி, அதனை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் செயலாற்றும் என்று கூறப்படுகிறது. இது, மாநிலங்களவையின் 250வது கூட்டத் தொடராகவும் விளங்குகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...