நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும்!!!
நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும்!!!
நாட்டு சேதி :
நாடு முழுவதிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார்.
நம்ம சேதி:
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே ரேஷன், இப்போ ஒரே தேதியில் சம்பளமா?? இதெல்லாம் பத்தாதுங்க…. ஒரே உடை, ஒரே உணவு, இப்படி இன்னும் புதுசு புதுசா எதிர்பார்க்குறோமுங்க….
************************
நாட்டு சேதி:
தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் என்று ரஜினி சொல்வது சரியல்ல, தமிழகத்தில் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி விட்டார் . வைகோ பேட்டி.
நம்ம சேதி:
ஐயா மகராசா!!! உங்களத்தான் எதிர்பாத்துக்கிட்டு இருந்தோம்…. அவரே இப்பத்தான் தத்தித்தத்தி முயற்சி செஞ்சு முன்னாடி வர பாக்குறாரு….. மொத்தமா முடிச்சு விட்டுராதீங்க ….
************************
நாட்டு சேதி:
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தனது சொந்த பங்காக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் கொடுப்பதாக துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு.
நம்ம சேதி:
தமிழ்நாட்டிலேயே தமிழையும் தமிழ் மக்களையும் இல்லாமலாக்க எவ்வளவு நடக்குதுங்க அதெல்லாம் உங்க கண்ணிலேயே தெரியலீங்களா? அமெரிக்காவில போய் தமிழ வளக்க ஆரம்பிச்சிட்டீங்க???
*****************************
நாட்டு சேதி:
மக்கள் பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தாவிட்டால் திமுக சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும். தர்மபுரி பொதுக்கூட்டத்தில் மு. க . ஸ்டாலின்.
நம்ம சேதி:
ஆளுநரை பார்த்துட்டு வந்து அதையும் தள்ளிவச்சுற மாட்டீங்களே!!!!
************************
நாட்டு சேதி:
பள்ளிகள் அருகே தரமற்ற உணவுப் பொருட்களுக்கு தடை. உணவு பாதுகாப்பு ஆணையம் முன்மொழிவு.
நம்ம சேதி:
நா பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்தில இருந்து இதத்தானுங்களே சொல்லுறீங்க…… ஒன்னும் நடந்த மாதிரி தெரியலீங்களே!!! பானி பூரில இருந்து டாஸ்மாக் வரைக்கும் புது புது கடைங்க தான் வந்துருக்கு ….
**********************************