நாட்டு சேதியும் !!!! நம்ம சேதியும்!!!!
நாட்டு சேதியும் நம்ம சேதியும்
நாட்டு சேதி !!!
ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என உச்சநீதிமன்றம் மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது.
தென்பெண்ணையாற்றில் கர்நாடகா அணை கட்டலாம் என தமிழக அரசின் மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு.
நம்ம சேதி :
எப்பவும் போல இப்பவும் உச்ச நீதிமன்றத்தின் வழியாக நீதி நிலைநாட்டப் பட்டது என நம்புவோமாக….
*******************************
நாட்டு சேதி :
2020 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரேசில் அதிபர். பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் பதினொன்றாவது உச்சி மாநாட்டின்போது இந்தியபிரதமர் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் பிரேசில் அதிபர்.
நம்ம சேதி :
கடந்த ஆட்சிக்காலத்தில எதுக்கு ஒவ்வொரு நாடா போனோம்னு இப்ப வாச்சும் தெரியுதா??? நேத்து சீனா… இன்னிக்கி பிரேசில்… ஹா ஹா ஹா…
***************************
நாட்டு சேதி :
முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடு இந்தியா— பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
நம்ம சேதி :
ஆமா….. நீங்க நோய முதலீடு செய்யலாம்… பொருளாதார மந்தநிலய முதலீடு செய்யலாம்…. வேலையின்மையை முதலீடு செய்யலாம்…உங்க உங்க நாட்டுக்கு தேவையானது கிடைக்க தேவை இல்லாத எல்லாத்தையும் எங்க நாட்டுல முதலீடு செய்யலாம்… வாங்க… வாங்க.. வாங்க.
*******************************
நாட்டு சேதி :
ராமர் கோயில் பணி மேற்கொள்வதில் முக்கியத்துவம் யாருக்கு என்பதில் அயோத்தி சாதுக்களுக்கு இடையே மோதல்.
நம்ம சேதி :
அட்ரா சக்க !!! போடுங்கப்பா அடுத்த வழக்க !!!!
*****************************
நாட்டு சேதி :
ஐந்து புதிய மாவட்டங்களை நவம்பர் 29 முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
நம்ம சேதி :
நீங்க நடத்துங்க எசமான்… இன்னைக்கு மாவட்டங்களை பிரிங்க…. அதிக மாவட்டங்கள் எண்ணிக்கைய காட்டி அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு மாநிலத்தையே கூட பிரிங்க… நாங்க எதுவும் கேட்க மாட்டோம்!!! ஏன்னா உங்களாலே ஒன்னும் கேக்க முடியாதே !!!
*******************************
நாட்டு சேதி :
கும்பகோணத்தில் புதை சாக்கடை சீரமைப்பின் போது விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி மரணம்.
நம்ம சேதி :
போர் விமானம் வாங்க அத்தனை ஆயிரம் கோடி, கோயில் கட்ட இவ்வளவு கோடி, நிலாவுக்கு ராக்கெட் அனுப்ப அவ்வளவு கோடின்னு அறிக்கை விடுறவங்க மண்டையில பதியிரமாதி தயவுசெய்து இத போய் யாராவது காட்டுங்கப்பா…
**********************************