செல்போன் கண்டுபிடித்தவர்களை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர் ஆத்திரம்!!
செல்போன் கண்டுபிடித்தவர்களை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர் ஆத்திரம்!!
செல்போன் கண்டுபிடித்தவர்களை மிதிக்க வேண்டும் என்று கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் மடிடிக் கணினி வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே காணாடுகாத்தானில் உள்ளது அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி. இங்கு மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மடிடிக் கணினி வழங்கப்பட்டது.
அப்போது, அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசுகையில், ”மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று மாணவர்களுக்கு மடிடிக் கணினி வழங்கும் திட்டம். இந்த திட்டத்தால் ஏழை மாணவர்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர்.
கிராமங்களில் எங்கு பார்த்தாலும் மாணவர்கள் தற்போது செல்போனை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்களது எதிர்கால வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதைப் பார்க்கும்போது, செல்போனை கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.