இந்தியாவைத் துரத்தும் பொருளாதார மந்தநிலை!
இந்தியாவைத் துரத்தும் பொருளாதார மந்தநிலை!
இந்த ஆண்டில் வெறும் 5.6 சதவீத வளர்ச்சியை மட்டுமே இந்தியா கொண்டிருக்கும் என்று மூடீஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது
இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்ப்பிட்டுள்ளது.த மதிப்பீடுகளும், அது தொடர்பான விவாதங்களும் சமீப காலமாக அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தொடங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, நோமுரா என இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டில் வளரவே வளராது என்று பல்வேறு நிறுவனங்கள் மதிப்பீடுகளுடன் கூறியுள்ளன.
அடிமேல் அடிவாங்கும் இந்தியப் பொருளாதாரம்!
இதுபோன்ற சூழலில், இந்தியப் பொருளாதார மந்தநிலையை மேலும் கடினமாக்கும் விதமாக, மூடீஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சரிவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்!
இதற்கு முன்னர் மூடீஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 5.8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது. மந்தநிலை மேம்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் மூடீஸ் நிறுவனம் தனது மதிப்பீட்டை இப்போது குறைத்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கு நெருங்கும் ஆபத்து!
எனினும், 2020ஆம் ஆண்டில் 6.6 சதவீத வளர்ச்சியையும், 2021ஆம் ஆண்டில் 6.7 சதவீத வளர்ச்சியையும் இந்தியா கொண்டிருக்கும் என மூடீஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டின் மத்தியில் இருந்தே பொருளாதார வளர்ச்சி தேய்ந்து வருவதாகவும் மூடீஸ் நிறுவனம் கூறுகிறது.
பொருளாதாரம் வளரவே வளராது! ஆய்வில் எச்சரிக்கை!
நுகர்வுக்கான தேவை குறைவு, முதலீடுகளில் வீழ்ச்சி போன்ற காரணங்களால்தான் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மேம்படாமல் இருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் மூடீஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த கடன் மதிப்பீட்டு அறிக்கையில், இந்தியாவின் கடன் மதிப்பீட்டு நிலையைக் குறைத்திருந்தது நினைவுகூரத்தக்கது.