இலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு

இன்றுடன் கால அவகாசம் நிறைவு! இலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு:

       ஜனாதிபதித் தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக இலங்கை மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

         இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

      அத்துடன், இதுவரையில் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு முன் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் மூலமாக இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

     அங்கீகரிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திரம், செல்லுபடியான கடவுச்சீட்டு, ஓய்வூதிய அல்லது முதியோருக்கான அடையாள அட்டை அல்லது மதகுருமாருக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் ஆள் அடையாளத்தை உறுதி செய்ய முடியாத நபர்கள் இது வரையில் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவில்லையாயின் அது தொடர்பில் கவனம் செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

       ஆள் அடையாளத்தை உறுதி செய்ய முடியாதவர்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாது என அவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!