புகழ்பெற்ற பாடல்கள்(1)/மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கு
பாடல் வரிகள் வாலியுடையது
படம் தெய்வத்தாய்
தெய்வத்தாய் படம்தான் எம்ஜிஆருக்காக வாலி எல்லாப்பாடல்களும் எழுதிய முதல் படம்.
இந்தப் படத்தில் எல்லா பாடல்களும் ஹிட்
‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்ற பாடல்தான் பெரிய ஹிட்
எம்ஜிஆர் பாணி பாடலாக பெரிதும் விரும்பப்பட்டது
தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இந்தப்பாடல் கேட்டது
மிக மிக அதிகமாக மக்கள் திலகத்தின் இந்தப்பாடல் ஏன் ரசிக்கப்படனும்
. ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்றால் அந்த மூன்றெழுத்து என்ன என்ற விவாதம் அப்போது மக்களிடையே எல்லாம் நடந்தது. ‘கடமை அது கடமை’ என்றே பாடல் சொன்னாலும் , கொள்கை என்று சிலர் அர்த்தம் கற்பித்தனர். இல்லை, திமுக என்பதைத்தான் எம்ஜிஆர் அப்போது திமுக கட்சியில் இருந்தார்
இப்படிப் பாடியிருக்கிறார் என்றனர் சிலர். எம்ஜிஆர் அண்ணாவைத்தான் சொல்கிறார் என்றனர் சிலர். ‘தமிழ்’ என்றனர் சிலர். எம்ஜிஆரைக் கொண்டாடிய ரசிகர்கள் அந்த மூன்றெழுத்து எம்ஜிஆர் என்றனர்.
இப்படிப்பட்ட விவாதங்கள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க அந்த மூன்றெழுத்து என்ன என்பதற்குத் தன்னுடைய பாணியில் விளக்கம் சொன்னார் சோ. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று பாடுகிறாரே எம்ஜிஆர் அந்த மூன்றெழுத்து என்ன? என்பது சோவிடம் கேட்கப்பட்ட கேள்வி. ‘அந்த மூன்றெழுத்து மூக்கு’- என்பது சோ சொன்ன பதில்.
ஆக, சில பாடல்கள் மக்களிடையே சமூகத்தில் எவ்விதமாகத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை காண்கிறோம்
புகழ்பெற்ற பாடல்கள் என்றால் இப்படியெல்லாம் மக்களிடையே தாக்கங்களை ஏற்படுத்துகிறது
ஒரு சிலருக்கு மட்டும் பிடித்துப்போய் அவர்கள் தங்களின் ரசனைக்கேற்ப அந்தப் பாடல் இருக்கும்
ஆனால் அது மக்களை சென்று அடைவதில்லை
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
,இந்த வரியை கேட்ட பின்தான் எனக்கு தெரியும் வாழைப்பூ பூமியைை பார்த்து இருக்கும் என
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
என்ன அருமையான வரிகள்
உயிரே போனாலும் கொள்கையை விடாதே
இன்று எல்லாம் தலை கீழ்
மக்கள் திலகம்
வாலி
இசையமைத்த விசுவநான் ராமமூர்த்தி
மக்கள் திலகமே பாடுவது போல ட்டி எம் எஸ்
இந்த நால்வர் கூட்டணி 60 மற்றும் 70 களின்
இளைஞர்களை நல் வழிப்படுத்தியத என சொல்வேன்
இலங்கை வானொலி
ரிகார்டுகள் என
மக்களை சென்று புழங்கியது
எந்த ஒரு பாடல் மக்களின் நாவில் பத்து ஆண்டுகள் இருபது ஆண்டுகள் தாண்டி உட்கார்ந்திருக்கிறதோ அவை சட்டென்று மக்களால் அடையாளப்படுத்த முடிகிறது
. இப்படிப்பட்ட அடையாளங்களை வாலியின் பாடல்களால் ஏற்படுத்த முடிந்தது இது ஒரு பெரிய சாதனை.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
UMAKANTH