நீ கலங்குவதற்கு இங்கு எதுவுமே இல்லை.
நீ கலங்குவதற்கு இங்கு எதுவுமே இல்லை.
அன்று புத்தகங்களுக்கிடையே வைத்த மயிலிறகு வளருமா வளராதா
என எதிர்பார்த்திருந்த நாட்களில்
,,, காணாமல் போன அழிரப்பர் துண்டொன்றிற்காயக
கண்ணீர் வடித்திருப்போம்
. ஒரே நிறத்தில் ஆடை அணிந்ததற்காய் தோழி கையைக்
கிள்ளி மகிழ்வைத் தெரிவித்துக் கொள்ளும் நாட்களில்,
,, நட்பின் சின்னமாய் விளங்கிய உடைந்த
பேனாவொன்றைத் தொலைத்ததற்காய் சகோதரியுடன்
சண்டை போட்டிருப்போம்.
‘கடைசிப் பக்கத்தில் எழுதுகிறேன்
. கடைசி வரை மறவாதே
‘ என ‘ ஆட்டோகிராப்’ கிறுக்கிக்கொண்டிருந்த நாட்களில்
,,, தாய் சொன்ன ஒரு வார்த்தைக்காய்,
அதுவரை சீண்டப்படாத தன்மானம் அன்றுதான்
சீண்டப்பட்டதுபோல, சாப்பாட்டின் மீது
கோபம் காட்டியிருப்போம்.
Smart phone களுக்கு charge ஏற்றி ற்றியே
நிமிடங்கள் சுழலும் நாட்களில்,,,
முக்கியமான கட்டத்தில் முடிந்த data வுக்காக
எரிச்சல்பட்டிருப்போம்.
வாழ்க்கை இப்படித்தான்….
இங்கு ஆசைகளும் எதிர்ப்பார்ப்புகளும்
சிறிதாக இருக்கும் வரை
இழப்புக்களோ கவலைகளோ
என்னை பெரிதாக தாக்குவதில்லை…
ஆசை பேராசையாகவும் எதிர்பார்ப்பு
பெரியதாக உருமாறும் போதுதான்
– இன்னல்கள் தாங்க மனம் பக்குவப்படவேண்டியுள்ளது
. அன்று காணாமல் போன அழிரப்பர் துண்டு
இன்று பெறுமதியில்லாதது போலவே…..
இன்று நீ கலங்கும் விடய
ம் நாளை சிறுபிள்ளைத்தனமாய் விளங்கலாம்
. ஏனெனில், வாழ்க்கை இவ்வளவுதான்.
நீ கலங்குவதற்கு இங்கு எதுவுமே இல்லை.
#கவிநிலா
#கவிமதி
#மனதின்ஓசைகள்
#மஞ்சுளாயுகேஷ்.