வீரமரணம்

 வீரமரணம்

வீரமரணம்


ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த 370 -ஆவது சட்டப்பிரிவை, மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது.

அத்துடன் இந்த மாநிலம், ஜம்மு, லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அதிரடியாக அறிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசு பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருதாகவும், அங்கு மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதாகவும் சர்வதேச நாடுகளிடம் குற்றம்சாட்டி வந்தது.

ஆனால், பாகிஸ்தானின் பேச்சு சர்வதேச அரங்கில் சுத்தமாக எடுப்படாமல் போனது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நாட்டு, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் இந்திய- பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாடு கோட்டு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், ராணுவ நிலைகள் மீது ராணுவ தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஒருபுறம் ராணுவ தாக்குதலும், மறுபுறம் பயங்கரவாதிகளை ஜம்மு -காஷ்மீருக்குள் ஊடுருவ செய்வது என, அந்த மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் கங்கணம் கட்டிக் கொண்டு, சதி வேலைகளை செய்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை டங்தார் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். மேலும், குடியிருப்புவாசி ஒருவரும் உயிரிழந்தார்.

இதையடுத்து, டங்தாரை ஒட்டிய, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவம் நடத்திய அதிரடி பீரங்கி தாக்குதலில் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதில் 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று, இந்திய – பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாடு கோட்டு அருகே, நவ்செரா பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில், இந்திய ராணுவ அதிகாரி (ஜேசிஓ) ஒருவர் வீரமரணம் அடைந்தார். தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தை ராணுவம் தமது கட்டுப்பாட்டில் கொண்டு லந்துள்ளதுடன், பயங்கரவாதிகளை நோக்கி எதிர் தாக்குதலும் நடத்தி வருகின்றது.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...