அதிமுக நீடிக்குமா..?

 அதிமுக நீடிக்குமா..?

அதிமுக நீடிக்குமா..? 


தமிழ்நாட்டில், 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை, எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவைவிட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.


இதுகுறித்து அப்பாவு கூறுகையில், “தபால் வாக்குகள் 203ஐ எண்ணாமலே, நான் தோற்றுவிட்டேன் எனக் கூறுகிறார்கள்” என குற்றம் சாட்டினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்

வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம், 19, 20, 21 சுற்றுகளையும் செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளையும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மறுமுறை எண்ண உத்தரவிட்டது. அதன்படி, உயர் நீதிமன்ற வளாகத்திலே மறு வாக்கு எண்ணிக்கை நடந்தது. முடிவுகளை சீலிட்டக் கவரில் வைத்து பதிவாளரிடம் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே, இன்பதுரை வாக்கு எண்ணிக்கைக்குத் தடை கோரி மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதுக்குத் தடை வதிந்திருந்தது. மறு விசாரணையை அக். 23ஆம்(இன்று) தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ள நிலையில், ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த முறை உச்ச நீதிமன்றத்தில் அப்பாவு தரப்பில் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இதனால், இன்று தமிழ்நாட்டின் 3 சட்டசபை தொகுதிகளுக்கு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...