அப்படி போடு பாலியல் -முதலிடம் உத்திர பிரதேசம்

 அப்படி போடு பாலியல் -முதலிடம் உத்திர பிரதேசம்

அப்படி போடு  பாலியல் -முதலிடம்  உத்திர பிரதேசம்


பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளின் கணக்கெடுப்பு வெளியாகியுள்ளது. இதில் இந்திய நாட்டில் உத்திர பிரதேச மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 56,011 வழக்குகள் 2017 ஆம் ஆண்டில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் குற்றச்சம்பவங்கள் குணிந்த பாடில்லை என்பதை இந்த கணக்கெடுப்பு மூலமாக அம்பலமாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தகவலின் படி 3.2 லட்சம் வழக்குகளும், 2016 ஆம் ஆண்டில் 3,38,954 வழக்குகளும் பதிவாகியுள்ளன.


2017 இல் 3.5 லட்சமாக பாலியல் வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த கணக்கெடுப்பில் பாலியல் வழக்குகள் உட்பட அனைத்து க்ரைம் வழக்குகளின் எண்ணிக்கைகள் வெளியாகியுள்ளன. இதில் அதிகப்படியாக பாலியல் வன்கொடுமைகள் செய்யப்பட்ட வழக்குகளே உள்ளன.

அதன் விவரங்கள்:

கணவன் மற்றும் உறவினர்களால் பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள்: 27.9 %

பாலியல் வன்கொடுமை: 7.0 %

உடல் ரீதியாக தாக்குதல்: 21.7 %

கடத்தல் வழக்குகள் : 20.5 %

இந்த கணக்கெடுப்பின் தகவல்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு பிறகு வெளி வந்ததாக கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிராக நடந்துள்ள குற்ற வழக்குகளின் முடிவில், அதிகப்படியான வழக்குகள் பதிவான முதல் மூன்று மாநிலங்களின் விவரங்களை குறித்து பார்க்கலாம்

முதல் மூன்று மாநிலங்கள்

உத்திரபிரதேசம் : 56,011 வழக்குகள்

மகாராஷ்டிரா: 31,979 வழக்குகள்

மேற்கு வங்காளம் : 30,002 வழக்குகள்பெண்கள் மீதான தாக்குதல் : தமிழ்நாடு – 623


மற்ற மாநிலங்கள்:

ஒடிசா : 5220

மத்தியபிரதேசம் : 5006

உத்திரபிரதேசம் : 4488

மகாராஷ்டிரா : 4385

கர்நாடகா : 4135





கற்பழிப்பு வழக்குகள் : தமிழ்நாடு – 283

அதிக வழக்குகளை கொண்ட 5 மாநிலங்களின் பட்டியல்

விசாரணைக்கு பிறகு உறுதி செய்யப்பட்டது:

மத்தியபிரதேசம் : 5599

உத்திரபிரதேசம் : 4669

ராஜஸ்தான் : 3319

ஒடிசா : 2082

அசாம் : 2048தமிழ்நாட்டில் பதியப்பட்டுள்ள பல்வேறு குற்ற வழக்குகளின் எண்ணிக்கை..!


கற்பழிப்பு : 283

வாகன திருட்டு : 5891

மோசடி : 236

விதிகளை மீறி வாகனத்தை இயக்குதல் : 63776

கணவன், மனைவி பிரச்னை : 984






admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...