முகமூடி கொள்ளை
முகமூடி கொள்ளை
தமிழகத்தில் துணிகரமாக பெரிய கொள்ளை முதல் சிறிய குற்றங்கள் வரை நடந்து வருகிறது. ஆனால் பெரிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவர்களை கூட எளிதில் பிடித்து விடும் போலீஸாருக்கு எங்கோ ஒரு இடத்தில கைவரிசை காட்டும் சிறிய குற்றவாளிகளை பிடிப்பதில் யானை காதுக்குள் எறும்பு நுழையும் கதையாகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வழிப்பறி, தனியாக வரும் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற கடுமையான குற்றங்களை செய்து வந்த முகமூடி கொள்ளை கூட்டத்தின் தலைவன் கைது செய்யப்பட்டுள்ளா
குற்ற சம்பவம் அதிகமாக நடக்கப்பட்டதை குறித்து வல்லம், பிள்ளையார் பட்டி – பள்ளியக்ரகாரம் நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் இருந்தே அதிகப்படியான புகார்கள் வந்துள்ளன. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்களை வழிமறித்து, செல்போன் மற்றும் பணத்தை பிடுங்கி அனுப்புவது, இளம்பெண்களை மிரட்டி பாலியல் சிலுமிஷம் செய்து அனுப்புவது போன்ற குற்ற சம்பவங்களில் இந்த கும்பல் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதில் உல்லாசத்திற்காக ஒதுங்கும் ஆண்,பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து வல்லம் காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்த போதெல்லாம் போலீசார் அப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்
ஆனாலும் முகமூடி கொள்ளையர்கள் நாளுக்கு நாள் தங்களது இடத்தை மாற்றி கைவரிசையை செய்து வந்துள்ளனர். இதுபோல கடந்த இரண்டு ஆண்டுகளாகவே போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த இவர்களை கூண்டோடு பிடிக்க தஞ்சாவூர் டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த முறை கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீசார். நேற்று முன்தினம் இரவு , வல்லம் பகுதி அருகே சந்தேகத்தின் அடிப்படியில் இருவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் தஞ்சாவூர் மனோஜிப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (27) என்பவர்தான், இத்தனை நாட்களாக தேடி வந்த வழிப்பறி கும்பலின் தலைவன் என தெரிய வந்துள்ளது.
இதில் ரமேஷ், வல்லம் பகுதிகளில் இரவு நேரங்களில் வழிப்பறி செய்து வந்ததாகவும், தனிமையில் வரும் கல்லூரி மாணவிகளை பிடித்து பலாத்காரம் செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள மற்ற கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.