பச்சை மரம் எரியுதாம்

 பச்சை மரம் எரியுதாம்

பச்சை மரம் எரியுதாம்

கோடை காலங்களில் ஏற்படும் காட்டுத் தீ அல்லது மனிதர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகளால் மரங்கள் தீக்கிரை ஆவதுண்டு

அண்மையில் அமேசான் காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்குள்ள அரிய வகை தாவர இனங்கள் மட்டுமின்றி உயிரினங்களும் தீக்கிரையானதை கண்டு உலகமே கண்ணீர் வடித்தது.

ஆனால், புராணக் கதைகளில் வருவதை போன்ற வியக்கத்தக்க ஓர் சம்பவம் அமெரிக்காவில் தற்போது நிகழ்ந்துள்ளது.

அந்த நாட்டின் டெக்சாஸ் மாகாணத்துக்குட்பட்ட பச்சை பசேல் என மரங்கள் நிறைந்த பகுதியில் ஒரு மரத்தின் நடுவே பிளவு ஏற்பட்டும், அந்த பிளவுக்குள் தீப்பற்றி, அந்த மரம் கொழுந்து விட்டு எரியும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.சோஃபையன் என்பவர், தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, கடந்த 36 மணி நேரத்தில் 18.2 மில்லியன் (கிட்டதட்ட 2 கோடி) முறை பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வீடியோ பதிவிடப்பட்ட சில நிமிடங்களிலேயே 5,13,921 லைக்குகளை அள்ளி உள்ளதுடன், 1,32,510 முறை பகிரப்பட்டும் உள்ளது.

“மரத்திற்குள் தீ பிடித்து எரிவதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. ஆனால் மரம் எரிவது மட்டும் உண்மை. மின்னல் தாக்கியதால் இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்திருக்கலாம். காட்டுத் தீ அல்லது மனிதர்களின் கவனக்குறைவான செயலாலும் மரம் பற்றி எரிந்திருக்கலாம் ” என சோ ஃபையன் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்துக்கு நெட்டிசன் பலர் எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வீடியோ பொய்யானது எனவும் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், சோ ஃபையனுக்கு ஆதரவாகவும் ட்விட்டரில் சிலர் குரல் கொடுத்தும் வருகின்றனர்.

எது எப்படியோ, உலக அளவில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது மட்டும் உண்மை.சோஃபையன் என்பவர், தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, கடந்த 36 மணி நேரத்தில் 18.2 மில்லியன் (கிட்டதட்ட 2 கோடி) முறை பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வீடியோ பதிவிடப்பட்ட சில நிமிடங்களிலேயே 5,13,921 லைக்குகளை அள்ளி உள்ளதுடன், 1,32,510 முறை பகிரப்பட்டும் உள்ளது.

“மரத்திற்குள் தீ பிடித்து எரிவதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. ஆனால் மரம் எரிவது மட்டும் உண்மை. மின்னல் தாக்கியதால் இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்திருக்கலாம். காட்டுத் தீ அல்லது மனிதர்களின் கவனக்குறைவான செயலாலும் மரம் பற்றி எரிந்திருக்கலாம் ” என சோ ஃபையன் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்துக்கு நெட்டிசன் பலர் எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வீடியோ பொய்யானது எனவும் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், சோ ஃபையனுக்கு ஆதரவாகவும் ட்விட்டரில் சிலர் குரல் கொடுத்தும் வருகின்றனர்.

எது எப்படியோ, உலக அளவில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது மட்டும் உண்மை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...