சென்னையில் 12 மாடி கட்டிடத்திற்கு நடுவே மெட்ரோ ரயில்
தமிழகத்தில் 12 மாடி கட்டிடத்திற்கு நடுவே மெட்ரோ ரயில் சேவை…
தமிழகத்தில் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், மெட்ரோ ரயில் சேவை முதலில் சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சேவை சிறப்பாக செயல்படுவதை அடுத்து, மதுரை மற்றும் கோயம்புத்தூரிலும் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் சேவை பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தில், நகரின் மிக பெரிய கட்டிடங்களுக்குள்ளும் மெட்ரோ ரயில் சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சென்னையின் திருமங்கலத்தில் உள்ள 12 மாடி கட்டிடத்திற்கு உள்ளேயும், கோயம்பேடு மற்றும் திருமயிலை ஆகிய பகுதிகளின் மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில் அல்லது வெளியேறும் பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு தளத்தில் காபி குடித்துவிட்டு நிதானமா வந்து பயணம் செய்யலாம்
இல்லை ஷாப்பிங் முடித்துவிட்டு பயணம் இப்படி
மெட்ரோ ரயில்
அந்த கட்டிடத்தின் உள்ளே புகுந்து வெளியில் வரும்