லாரி ஸ்டிரைக்.. வாட்ஸ் ஆப் மெசேஜ்களை வைத்து மத்திய அரசையே ஹிட் ஆக்கிய லாரி டிரைவர்கள்.
லாரி ஸ்டிரைக்.. வாட்ஸ் ஆப் மெசேஜ்களை வைத்து மத்திய அரசையே ஸ்டன் ஆக்கிய லாரி டிரைவர்கள்.
ஹிட் அன்ட் ரன் வழக்குகளுக்கு எதிராக நடத்தப்படும் லாரி டிரைவர்கள் போராட்டம் முறையாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது
ஹிட் அன்ட் ரன் வழக்குகள் எனப்படும் ஒருவரை சாலையில் வாகனத்தால் தாக்கிவிட்டு செல்லும் வழக்குகள் தொடர்பான புதிய சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நாடு முழுவதும் பரவி வந்த நிலையில் அன்றாட வாழ்க்கை மக்களிடையே சீர்குலைந்துள்ளது.
லாரி ஸ்ட்ரைக் காரணமாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் உள்ள 2,000 க்கும் மேற்பட்ட பெட்ரோல் பம்புகள் செவ்வாய்க்கிழமை இரவு பெட்ரோல் , டீசல் இல்லாமல் வறண்டுவிட்டன, லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வட இந்தியாவின் முக்கிய சந்தைகளிலும் காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில சந்தைகளில் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
முக்கியமாக லாரி ஓட்டுனர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டம் செய்வதால்.. வாகனங்கள் செல்ல முடியாமல் முடங்கி உள்ளன. உள்துறை அமைச்சகம் நேற்று மாலை போராட்டக்காரராக்களின் குழுவை சந்தித்தது, ஆனால் இந்த சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பரிசீலனை செய்வோம் என்று கூறிய நிலையில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
. ஹிட் அண்ட் ரன் என்றால் என்ன: ஒருவரை சாலையில் வாகனத்தை வைத்து மோதிவிட்டு நிற்காமல் செல்வது ஹிட் அண்ட் ரன் ஆகும்.
இந்த Hit and Run வழக்கில் குற்றம்சாட்டப்படும் வாகன ஓட்டிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று புதிய சட்டம் சொல்கிறது. தண்டனை சட்டத்தை மாற்றி கொண்டு வரப்பட்ட சட்டத்தைதான் லாரி டிரைவர்கள் எதிர்க்கின்றனர். ரூ.7 லட்சம் அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. இந்திய தண்டனை சட்டத்தை மொத்தமாக மாற்றி இனி பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில்தான் இந்த புதிய சட்டம் உள்ளது. கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் அதற்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும். அதன்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். சம்பவம் நடந்தவுடன் அதை காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தப்பித்தால் அதுவும் தவறு. அதற்கும் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்று
எப்படி நடக்கிறது: ஹிட் அன்ட் ரன் வழக்குகளுக்கு எதிராக நடத்தப்படும் லாரி டிரைவர்கள் போராட்டம் முறையாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் முழுக்க முழுக்க வாட்ஸ் ஆப் மூலம் திட்டமிடப்பட்டு வருகிறதாம். லாரி டிரைவர்கள் குழு சார்பாக வாட்ஸ் ஆப் மூலம் முதலில் இந்த சட்டம் பற்றிய விளக்கம் கடந்த 10 நாட்களாக பரப்பப்பட்டு வந்துள்ளது. இந்த சட்டத்தால் நமக்கு எப்படி எல்லாம் பிரச்சனை ஏற்படும் என்பதை விளக்கி வாட்ஸ் ஆப் மெசேஜ்கள், ஆடியோக்கள் பல இங்கும் அங்கும் சென்றுள்ளன. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் போன்ற மாநிலங்களில் உள்ள டிரைவர்கள்தான் அதிக அளவில் இப்படி மெசேஜ் அனுப்பி விவாதங்களை செய்துள்ளனர். பின்னர் வாட்ஸ் ஆப் மூலம்தான்.. போராட்டம் செய்யலாம்.. நீங்கள் ஒன்றாக பயணம் செய்யும் சாலைகளில் அப்படியே வாகனத்தை நிறுத்திவிட்டு போராட்டங்களை செய்யுங்கள். சாலைகளை முடக்குங்கள். வேற்று மாநில லாரிகளை கூட அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டு உள்ளனர். இப்படி வாட்ஸ் ஆப் மூலம்தான் முழுக்க முழுக்க திட்டமிட்டு இந்த போராட்டத்தை முடிவு செய்துள்ளனர்.
news courtesy:https://tamil.oneindia.com/