ஐம்பருப்பு வடை
ஐம்பருப்பு வடை
தேவையான பொருட்கள்:
உளுந்து – 1/2 கப்,
கடலைப்பருப்பு – 1/4 கப்,
துவரம் பருப்பு – 1/4 கப்,
பயத்தம் பருப்பு – 5 டேபிள் ஸ்பூன்,
பட்டாணி பருப்பு – 8 டேபிள் ஸ்பூன்,
வரமிளகாய் – 2,
பச்சை மிளகாய் – 1,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் பொரிப்பதற்கு – தேவையான அளவு,
செய்முறை :
தேங்காய்த்துருவல் – 5 டேபிள் ஸ்பூன், அரிந்த மல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன், கொரகொரப்பாகப் பொடித்த மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன். செய்முறை: 5 பருப்புகளையும் நன்றாகக் கழுவி நீர் சேர்த்து 1 மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் நீரினை வடிகட்டி உப்பு, வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக கெட்டியாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் மிளகுத்தூள், பெருங்காயம், தேங்காய்த்துருவல், மல்லித்தழை சேர்த்துப் பிசைந்து எண்ணெயைக் காய வைத்து காய்ந்ததும் வடைகளாகத்தட்டிப் பொரித்து எடுக்கவும்.